More
Categories: Cinema News latest news

தமன்னா காட்டுனா மட்டும் பாப்பீங்களா? சென்சாரை கிழித்தெடுத்த மன்சூர் அலிகான்

Mansoor alikhan: தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக அறியப்படுபவர் நடிகர் மன்சூர் அலிகான். சமீபத்தில் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பெரும்பாலான படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் என்பதையும் தாண்டி மன்சூர் அலிகான் ஓரு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கடைசியாக ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படம் இன்றைக்குத்தான் சென்சாருக்கு சென்று வந்திருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: எல்லா ரெக்கார்டும் காலி!.. நிஜமாவே நம்பர் ஒன் என நிரூபித்த விஜய்.. லியோ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..

படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் ஒரு நீண்ட லிஸ்ட்டை மன்சூரிடம் கொடுத்து இதெல்லாம் படத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் எடுத்துவிட்டால் படத்தில் ஒன்றுமே இருக்காது என கூறிவிட்டு அவசர அவசரமாக பத்திரிக்கையாளர் மீட்டிங்கை போட்டிருக்கிறார்.

எனக்கு நியாயம் வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் முன் மன்சூர் முறையிட்டிருக்கிறார். அதாவது அந்த சரக்கு படத்தில் அம்பானி, அதானி பெயர் பயன்படுத்தியிருக்கிறாராம். அப்படி வெளிப்படையாக சொல்லக் கூடாதாம்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் பண்ணி பாருங்க!.. பளிங்கு மேனியை காட்டி பாடாப்படுத்தும் ஜெயிலர் பட நடிகை…

டெல்லி என்ற பெயரையும் சொல்லக் கூடாது. ஊறுகாய் மாமி என்றும் பயன்படுத்தக் கூடாதாம். மேலும் திருநங்கைகளை பற்றி நல்ல கருத்து சொல்லும் காட்சியை தான் படத்தில் வைத்திருக்கிறாராம். ஆனால் அதில் ஏகப்பட்ட கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லி அதையும் எடுத்துவிட சொல்லியிருக்கிறார்கள்.

ஏன்? ஜெயிலர் படத்தில் தமன்னா தொடையை காட்டி ரா ரானு அத்தனை பேரையும் கூப்பிடும் போது இந்த சென்சாருக்கு தெரியலயா? அத மட்டும் வாயை பிளந்து பார்க்கிறார்கள். அந்தப் படத்தில் அந்தப் பாடலை தவிர வேற எந்த வெங்காய கதையும் இல்ல. அதுனால்தான் படமே ஓடுச்சு.

இதையும் படிங்க: இனிமே லோகியை நம்பி யாரும் பேட்டி கொடுத்திடாதீங்கப்பா!.. அப்புறம் செஞ்சிப்புட போறாரு..!

அப்ப ஒன்றும் சொல்லாத சென்சார் என் படத்தில் இல்லாத ஒன்றை இருக்குனு சொல்லும் போதுதான் வேதனையாக இருக்கிறது. சென்சாரை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்ல. அவர்கள் ஒரு அடிமைவாதிகளாகத்தானே செயல்படுகிறார்கள். ஆனால் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்கள் சொன்ன எதையும் நான் நீக்கப் போவதில்லை. என்ன நடக்குது என்று பார்ப்போம் என தன்னுடைய வேதனையை மன்சூர் அலிகான் பகிர்ந்தார்.

Published by
Rohini

Recent Posts