More
Categories: Cinema News latest news

வாய்ப்ப கொடுத்தா பேசவே மாட்டாரோ.. பயில்வானை பங்கமாக கலாய்த்த மன்சூர்… தேவ தான்!

Bayilvan Mansoor: தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களை பற்றி அவதூறாக பேசியே புகழை தேடிக்கொண்டவர் தான் பயில்வான் ரங்கநாதன். அவர் தற்போது நடித்திருக்கும் பட விழாவில் அடக்கிவாசித்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. 

மன்சூர் அலிகான் நாயகனாக நடித்து இருக்கும் படம் சரக்கு. இப்படத்தில் பாக்கியராஜ், பழ கருப்பையா, பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மது பழக்கத்தினால் வாழ்க்கை எப்படி அழியும் என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜய் இல்ல எனக்கு அஜித் தான்… ஆதிக் பலே கில்லாடிப்பா! அடிச்சா சிக்ஸர் தான் இனி!

சமீபத்தில் இந்த படத்தின் நிகழ்ச்சி நடந்தது. அதில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார். அவர் பேச போறார் என்ற போதே அங்கிருந்தவர்களே அதிர்ச்சியாகினர். இந்நிலையில் பயில்வான் பேச போகும் போதே படத்தினை என்ன கிழி கிழிக்க முடியுமோ கிழிச்சு தொடங்க விடுங்க என மன்சூர் அலிகான் சிரிச்சுக் கொண்டே சொன்னார். 

இதில் சற்று அதிராத பயில்வான் ரங்கநாதன் எது நீங்க போட்ட இந்த சால்வையையா என கவுன்டர் கொடுத்திருந்தார். ஆனால் படம் குறித்து தேவையில்லாத நிறைய விஷயங்களை பேசினார். அதில் மன்சூர் அலிகானே சற்று முகம் சுளித்தார்.

இதையும் படிங்க: அஜித் படத்தில் நான் சொன்ன ஐடியாலாஜி! 7ஜி நாயகன் கொடுத்த சர்ப்ரைஸ் – ஹிட்டுக்கு காரணமே இவர்தானா?

ஆனால் கவலையே படாமல் தொடர்ந்து பேசிய பயில்வான் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் படத்தினை பாராட்டவும் செய்தார். மேலும் தனக்கு மன்சூர் நல்ல சம்பளத்தினை கொடுத்ததாகவும் பேசி விட்டு அமர்ந்தார்.

இதனால் பயில்வான் ரங்கநாதனுக்கு வாய்ப்பு கொடுத்தால் பிரபலங்கள் குறித்து தேவையில்லாமல் பேசமாட்டார் போல என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர். அவரின் வீக் பாயிண்ட்டை பிடித்த மன்சூர் அலிகான் பலே ஆளுதான் எனவும் பேச்சுகள் எழுந்து வருகிறது.

Published by
Akhilan

Recent Posts