Mansoor alikhan: விஜயகாந்த நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் அசத்தல் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மன்சூர் அலிகான். முதல் திரைப்படத்தில் எந்த அறிமுக நடிகரும் இப்படி புகழடைந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். முதல் படத்திலேயே விஜயகாந்துக்கு வில்லனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவருக்கு பெரிய அதிர்ஷடமாக அமைந்தது.
அந்த படத்திற்கு பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். சமூக அக்கறை உள்ளவர். மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் அப்படியே பேசும் பழக்கம் கொண்டவர். இதனால் இவரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். இவரை பிடிக்காதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: கமலுக்கு மன்சூர் அலிகான்… விஜய்க்கு சத்யராஜா? லோகேஷின் ஸ்கெட்சே செம ஸ்பெஷல் தான்..!
மிகவும் அலட்டலான உடல் மொழியை கொண்டவர். அதில் மயங்கியதான் லோகேஷ் கனகராஜ் இவரை லியோ படத்தில் நடிக்க வைத்தார். வசனங்களையும் மிகவும் நக்கலாகவே பேசுவார். இந்நிலையில், கேப்டன் பிரபாகரன் படத்தில் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்..
கேப்டன் பிரபாகரன் படத்திற்கு வசனம் எழுதியவர் லியாகத் அலிகான். இவரிடம் சென்றுதான் வாய்ப்பு கேட்டு வந்துள்ளார் மன்சூர் அலிகான். மன்சூர் அலிகானை இப்ராஹிம் ராவுத்தரிடம் அழைத்து சென்று லியாகத் அலிகான் காட்டியுள்ளார். அவருக்கும் மன்சூரை பிடித்துப்போனது. ஏனெனில், அந்த படத்தில் எந்த படத்திலும் நடித்திராத அறிமுக நடிகரைத்தான் தேடி வந்தனர்.
இதையும் படிங்க: மன்சூர் அலிகானுக்காக சிலுக்கு செஞ்ச அந்த விஷயம்!.. மனுசன் எப்பவுமே அத மறக்கவே மாட்டாராம்!.
அதன்பின் ஒருநாள் லியாகத் அலிகானும், ராவுத்தரும் சத்யராஜ் நடித்த ‘வேலை கிடைச்சிடுச்சி’ படம் பார்க்க போக, அதில் மன்சூர் அலிகான் ஸ்டண்ட் நடிகராக நடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில், எந்த படத்திலும் நான் நடித்தது இல்லை என மன்சூர் அவர்களிடம் பொய் சொல்லியிருந்தார். உடனே கேப்டன் பிரபகாரன் படத்தில் மன்சூர் வேண்டாம் என ராவுத்தர் சொல்லிவிட்டாராம்.
இதை லியாகத் அலிகானிடம் மன்சூர் அலிகான் சொல்ல அவருக்கு மேக்கப் போட்டு சில டம்மி வசனங்களை பேச சொல்லி, நடிக்க வைத்து அதை வீடியோ எடுத்து ராவுத்தரிடம் காட்ட அதன்பின்னரே அவர் ‘இந்த படத்தில் வில்லனாக இவரே நடிக்கட்டும்’ என சொன்னாராம். இந்த தகவலை லியாகத் அலிகான் ஒரு சினிமா விழாவில் பகிர்ந்து கொண்டார்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிப்பதற்கு முன் குரூப் டேன்சர்களில் ஒருவராக பல படங்களில் மன்சூர் அலிகான் நடனமாடியிருக்கிறார். அதேபோல், வில்லனின் அடியாளாகவும் சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாய்ப்ப கொடுத்தா பேசவே மாட்டாரோ.. பயில்வானை பங்கமாக கலாய்த்த மன்சூர்… தேவ தான்!
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…