மனோஜின் இறப்புக்கு இரங்கல் சொல்லாத விஷால், சிவகார்த்திகேயன், சிம்பு, ஜெயம் ரவி!.. இட்ஸ் ராங் புரோ!…

#image_title
Manoj Bharathiraja: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவரின் மரணம் திரையுலகிலும், ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளில் இருந்த மனோஜ் 48 வயதிலேயே மரணமடைந்திருக்கிறார். ஒருபக்கம், பல புதிய முகங்களையும் அறிமுகம் செய்து வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் வெற்றி பெற்றவராக மாற்ற முடியவில்லை.
மனோஜ் இறந்துவிட்ட செய்தி கேள்விப்பட்டதும் சூர்யா, கார்த்தி, விஜய், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதேபோல் இயக்குனர்கள் பாக்கியராஜ், பாண்டிராஜ், ஆர்.கே.செல்வணி, பி.வாசு, மணிரத்னம் போன்றவர்களும் நேரில் சென்றார்கள்.

ஆனால், சிம்பு, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் நேரில் வந்து இரங்கல் தெரிவிக்கவில்லை. இதில், தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜாவுடன் நடித்தவர். பாராதிராஜா மீது அன்பும், மரியாதையும் கொண்டவர். நேரில் வரமுடியவில்லை என்றாலும் டிவிட்டரிலாவது இரங்கல் பதிவு போட்டிருக்கலாம். ஆனால், செய்யவில்லை. விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருப்பவர். பாண்டியநாடு படத்தில் பாரதிராஜாவின் மகனாக நடித்திருக்கிறார். அவருக்காகவாவது கண்டிப்பாக சென்றிருக்க வேண்டும். ஆனால் நேரில் செல்லவும் இல்லை, டிவிட் போடவும் இல்லை.

சிம்பு மனோஜின் நண்பர்களில் ஒருவராக இருந்தவர். சிம்பு நடித்த மாநாடு படத்தில் கூட மனோஜ் நடித்திருந்தார். சிம்புவை வைத்து சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை எடுக்கவும் மனோஜ் முயற்சிகள் செய்தார். மேலும், ஈஸ்வரன் படத்தில் பாரதிராஜாவின் மகனாக சிம்பு நடித்திருந்தார். ஆனால், அவரும் மனோஜுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. டிவிட்டும் போடவில்லை.
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்றவர்கள் பராசக்தி படத்திற்காக இலங்கை சென்றிருக்கிறார்கள். அவர்கள் டிவிட்டரிலாவது இரங்கல் பதிவு போட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மேலும், நடிகர் ரஜினியும் எந்த இரங்கல் செய்தியும் வெளியிடவில்லை. மேலும், பாரதிராஜாவல் அறிமுகம் செய்யப்பட்ட ரேவதி, ராதா, ரஞ்சனி, ராஜா உள்ளிட்ட்ட யாருமே நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.