லோகேஷ் படத்தை தயாரிக்க மல்லுக்கட்டும் தயாரிப்பாளர்கள்!… வாழ்ந்தா இப்படில வாழனும்…

by Arun Prasad |   ( Updated:2023-04-12 10:51:38  )
Lokesh Kanagaraj
X

Lokesh Kanagaraj

விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

“லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மாஸ் ஹிட் ஆன நிலையில் விஜய் ரசிகர்கள் “லியோ” திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

லோகேஷ் படத்தை தயாரிக்க முந்தியடிக்கும் நிறுவனங்கள்…

இந்த நிலையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்துடன் கைக்கோர்க்கவுள்ளதாக சமீப நாட்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மேலும் இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிக்கவுள்ளதாக ஒரு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது மேலும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் இணையும் படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது “கே.ஜி.எஃப்” படத்தை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனமும், “ஆர் ஆர் ஆர்” படத்தை தயாரித்த டிவிவி நிறுவனமும் முயற்சி செய்து வருவதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சிம்புவிடம் கதை சொன்னதால் கடுப்பான தனுஷ்?… வெற்றிமாறனை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்தார் தெரியுமா?

Next Story