Connect with us
mohanlal

Cinema History

தமிழில் ரீமேக் ஆன மோகன்லாலின் படங்கள்!.. ரஜினி, கமல், அஜித் யாரும் தப்பலயே!..

இயல்பான கதைக்களம், யதார்த்தமான படங்கள் என மலையாள திரையுலகத்தின் பயணம் இந்திய சினிமாவில் தனித்துவம் பெற்று வருகிறது. கேரளத்தில் வெளிவரும் படங்களின் கதையை தழுவியும், அங்கு வெளிவந்த படங்களை ரீ-மேக் செய்தும், மொழி பெயர்த்தும் பல படங்கள் தமிழில் வாகை சூடியுள்ளது.இப்படிப்பட்ட மலையாள திரை உலகின் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் மம்மூட்டி, மோகன்லால்.

இருவரும் அவ்வப்போது நேரடி தமிழ் படங்களிலும் நடித்தும் வருகின்றனர். இதில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த படங்களில் 30க்கும் மேற்பட்ட படங்களின் கதையை மையமாக கொண்டும், அவற்றை தழுவியும், ரீ-மேக் செய்தும் தமிழில் எடுக்கப்பட்டிருக்கிறது. “சிறைச்சாலை”, “ஜில்லா” போன்ற படங்களால் தனக்கென கோலிவுட்டிலும் தனி ரசிகர் பட்டாளம் ஒன்றினை உருவாக்கினார் மோகன் லால். மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடித்த இருவர் படம் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய படமாகும்.

இதையும் படிங்க: நீ பெரிய ஆளா மாறுவ? இது நடந்தா எனக்கு கால்ஷூட் வேணும்… அஜித்தை லாக் செய்த இயக்குனர்….

ரஜினிகாந்த் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த “முத்து”, மோகன்லாலின் “தேன்மாவின் கொம்பத்” படத்தின் ரீமிக்ஸாகவே பார்க்கப்படுகிறது. லக,லக,லக என்று தமிழ் ரசிகர்கள் கல,கல,கலவென மகிழ்ச்சியும், பயத்தோடும் பார்த்த “சந்திரமுகி”, மோகன்லால் நடித்த”மணிசித்தரத்தாழு”வின் மறுபதிப்பே.

நெல்லை தமிழில் படம் முழுவதும் வசனங்களை பேசி, நீண்ட நாட்களுக்கு பிறகு கவுதமியை ஜோடியாக்கி கமல் நடித்த ‘பாபநாசம்” மலையாளத்தில் சக்கைபோடு போட்ட “த்ரிஷ்யம்” தான். தந்தை மீது கொண்ட பாசத்தால் அவரின் கனவான காவல் அதிகாரி ஆக தனக்கு வந்த போராட்டங்களை தாண்டி லட்சியத்தை அடையும் நாயகனாக அஜீத் நடித்த “கிரீடம்” படம், மலையாள மக்கள் மோகன் லாலுக்கு அணிவித்த இதே பெயரில் முதலில் வெளிவந்த “கிரீடம்” படத்தின் தழுவலே.

“அண்ணாநகர் முதல் தெரு” சத்யராஜ், பிரபு நடிப்பில் வெளிவந்த நிலையில், அது கேரளத்திலிருந்து மோகன் லாலின் மூலமாக வந்திறங்கிய “காந்திநகர் செகன்ட் ஸ்டிரீட்” படமாகும். இவரின் “ஆரியன்” படத்தை தமிழில் “திராவிடன்” என் பெயர் மாற்றி அதே கதையை தமிழில் பார்க்க வைத்தார் சத்யராஜ். தமிழ் ரசிகர்கள் தாலாட்டிய “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு” படம் கேரள மக்கள் மோகன் லால் நடிப்பில் கொஞ்சி முடித்து அனுப்பிய “என்ட்டே மமட்டுக்குட்டி அம்மாக்கு” தான்.

இதையும் படிங்க: நெருப்பில்லாமல் புகையுமா? வாடிவாசலில் இருக்கும் பிரச்சினை.. சூர்யாவிடம் மல்லுக்கு நிற்கும் தாணு

சத்யராஜ் தமிழில் பெருமையாக பெயர் வைத்த “மக்கள் என் பக்கம்” படம் மலையாள திரைஉலகின் உச்சம் மோகன் லாலின் “ராஜவின்டே மகன்” தான். ‘பிரபு’வின் “வியட்நாம் காலனி”யும் கேரளத்தைச் சார்ந்த “வியட்நாம் காலனி”யே, தமிழில் கலகலப்பான படம், அதே வேலையில் மிகுந்த சீரியஸான கதையை கொண்டு வந்த ரசிகர்களை கவர்ந்தது இந்த “வியட்நாம் காலனி”.

மோகன் லாலின் “அபிமன்யூ”வே, சுந்தர்.சி. நடிப்பில் வெளியான “தலைநகரம்”ஆகும் . இப்படி நேரடியாகவும், மறைமுகவாகவும் தமிழ் ரசிகர்களை மகிழ்த்து வரும் வெளி மாநிலத்து நடிகர்களின் பட்டியலில் மோகன் லாலும் உள்ளார். கமல்ஹாசனுடன் இவர் நடித்த “உன்னைப்போல் ஒருவன்” படம் இன்றும் நேரடி தமிழ் படத்தில் வெற்றி படங்களின் வரிசையில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top