வெளியாகும் முன்பே தேசிய விருது வென்ற மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படம் எப்படி இருக்கு?

இந்திய சினிமாவின் வரலாற்று படங்கள் அல்லது குறிப்பிட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு படங்கள் என பிரம்மாண்டமாக பல கோடி ரூபாய் செலவில் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம் தான் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்.

Maraikkayar
Maraikkayar

இந்திய கடற்படை எல்லையில் முதல் முறையாக கடல் பாதுகாப்பை உருவாக்கியவராக கருதப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். இப்படத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஹைதராபாத்தில் உள்ள ராமோஜீ பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளதாம். மேலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை மரைக்காயர் படம் வென்றிருந்தது.

Maraikkayar
Maraikkayar

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக வெளியீட்டிற்கு காத்திருந்த இப்படம் இன்று ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் மொழி பதிப்பை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு வங்கியுள்ளார். இப்படம் சுமார் 100 கோடியில் தயாராகியுள்ள நிலையில் படத்திற்கான முன் பதிவின் மூலம் மட்டுமே ரூ.100 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Maraikkayar
Maraikkayar

இன்று வெளியாகியுள்ள மரைக்காயர் படத்தை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் படம் குறித்த அவர்களின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே படம் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் படம் மிகவும் போர் அடிப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு கலவையான விமர்சனங்களை பெற்று வரும் மரைக்காயர் படத்திற்கு பல திரை பிரபலங்களும் டிவிட்டரில் கமெண்ட் செய்துள்ளனர்.a

Related Articles
Next Story
Share it