நடிகர் அஜித் இப்படிப்பட்ட மனிதரா?... பைக்கால் உலகை சுற்றிய பெண் ஆச்சர்ய பேட்டி...
நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணிப்பது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குவது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர். வலிமை படப்பிடிப்பு நடைபெற்ற போது ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் தனியாக வந்தவர் அஜித்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து முடிந்து படக்குழு சென்னை திரும்பிவிட்டது. ஆனால், அஜித் ரஷ்யாவில் பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் செய்யும் குழுவை சந்தித்து அவர்களோ இணைந்து பைக் டிரிப் செய்தார்.
அதோடு, 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை பைக் மூலமாகவே சுற்றி வந்த பெண்ணான மாரல் யசர்லோவை டெல்லியில் அஜித் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது.
மேலும், டெல்லியில் யசர்லூவோடு அஜித் பேசிக்கொண்டிருக்கும் புதிய புகைப்படங்களும் இன்று காலை சமூகவலைத்தளங்களில் வெளியானது. மேலும், சாலை வழியாக யூரோப்,ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற 3 நாடுகளை பைக் மூலம் பயணம் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், அஜித் பற்றி கருத்து தெரிவித்த பைக் லேடி யசர்லூ‘அஜித் தென் இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் என்பதை கூகுள் மூலம் தேடிப்பார்த்து தெரிந்து கொண்டேன்.
அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பதை, அவரை நான் சந்தித்தபோது எடுத்த படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை வைத்து தெரிந்து கொண்டேன். ஆனால், அஜித் எந்த பந்தாவும் இல்லமால் எளிமையாக பழகுகிறார்’ என ஆச்சர்யமாக தெரிவித்துள்ளார்.
மேலும், நான் பைக் மூலம் எப்படி உலகை சுற்றி வந்தேன்? எப்படி திட்டமிட்டேன்? என பல தகவல்களையும் அவர் என்னிடம் ஆர்வமாக அஜித் கேட்டு தெரிந்து கொண்டார்.