மனுஷனை அந்த அளவுக்கு ஓட்டுனாங்க!.. வெள்ளத்துல இறங்கி மக்களை எப்படி காப்பாத்துறாரு மாரி செல்வராஜ்!

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என மக்களுக்கான படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மக்கள் போராடுவதை பார்த்து களத்தில் குதித்தார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் ஷூட்டிங் செய்து பிரபலமடைய நினைக்கிறார் என கடும் விமர்சனங்கள் குவிந்தன.
நீ என்ன அரசு அதிகாரியா என விமர்சனங்கள் கிளம்பின. மழை வெள்ளத்தில் அரசு அதிகாரிகளை விட அதிகமாக பொதுமக்கள் தான் அதிகளவில் உதவி செய்து வந்ததை எல்லாம் மறந்து விட்டு பேச ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: டங்கி ட்விட்டர் விமர்சனம்: 3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி சம்பவம்.. செம ஷாருக்கான்!
பல கிராமங்களின் சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடக்கின்றன என்றும் மக்களை காப்பாற்ற படகு கூட எடுத்துக் கொண்டு செல்ல முடியவில்லை என வேதனைகளை கொட்டித் தீர்த்த மாரி செல்வராஜ் தற்போது ஒரு குடும்பத்தை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி அழைத்துக் கொண்டு ஹெலிகாப்டர் உதவியை நாடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் இயக்குநர் இருப்பது தானே உங்களுக்கு பிரச்சனை, இப்போ பாருங்க, மனுஷன் தனியாளாக தனது டீம் உடன் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் வீடுகளில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றி வருகிறார் என மாரி செல்வராஜ் ரசிகர்கள் அந்த வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சூர்யா துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடுன வணங்கான் படம்!.. இப்போ எப்படி வந்துருக்கு தெரியுமா?..
இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் இல்லை என்றும் சென்னையில் பாதிப்பு என்றதும் பல பிரபலங்கள் முன் வந்த நிலையில், தென் தமிழ்நாட்டில் அதை விட அதிக பாதிப்புகள் இருக்கும் நிலையில், யாருமே குரல் கொடுக்காதது அந்த பகுதி மக்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தி வருகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய பிரத்யேக வீடியோக்கள்.@mari_selvaraj 👏 pic.twitter.com/QV2oXhA5Eg
— Ramesh Bala (@rameshlaus) December 21, 2023