latest news

மாரி செல்வராஜின் புதிய படத்தில் ஹீரோ அவரா?!.. தனுஷ் என்னாச்சி?….

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் மாரி செல்வராஜ். தாழ்த்தப்பட்ட தனது சமூக மக்கள் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்கள்.. இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து தனது திரைப்படங்களில் காட்டி வருகிறார் மாரி செல்வராஜ்.

இதனாலேயே கடுமையான விமர்சனத்திற்கும் இவர் உள்ளாகி வருகிறார். தொடர்ந்து சாதிய படங்களை எடுக்கிறார்.. எப்போதோ நடந்ததை இப்போது தேவையில்லாமல் படமாக எடுத்து சமுதாயத்தில் பதட்டத்தை உண்டு பண்ணுகிறார் என்றெல்லாம் இவர் மீது பலரும் விமர்சனம் வைப்பதுண்டு.

ஆனால் மாரியோ ‘என் மக்கள் சந்தித்த பிரச்சனைகளை நான் பேசுவேன்.. திரைப்படமாக எடுப்பேன்’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இவர் இயக்கி வெளியான பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் ஆக எல்லா படங்களும் விவாதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக துருவை வைத்து இயக்கிய பைசன் திரைப்படம் பாராட்டுக்களை பெற்றது.

அடுத்து தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு சரித்திர திரைப்படத்தை இயக்கப் போவதாக மாரி செல்வராஜ் சொல்லியிருந்தார். ஆனால் அது தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. ஏனெனில் தனுஷ் அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தின் நடிக்கவிருக்கிறார். எனவே மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவுள்ள படத்தில் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி ஹீரோவாக நடிப்பார் எனத் தெரிகிறது.

Published by
சிவா