நடிகரின் கன்னத்தை பதம் பார்க்கச் சொன்ன மாரி செல்வராஜ்… இவ்வளவு ஸ்டிரிக்ட்டாவா இருக்கிறது!
தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமாக சாதிய ஏற்றத்தாழ்வை குறித்து பேசும் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வருபவர் மாரி செல்வராஜ். தனது முதல் திரைப்படமான ‘பரியேறும் பெருமாள்” திரைப்படத்திலேயே இந்திய சினிமாவையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இவர். இதனை தொடர்ந்து தனுஷை வைத்து இயக்கிய “கர்ணன்” திரைப்படத்தை குறித்து நாம் தனியாக கூறத் தேவையே இல்லை. அந்த அளவுக்கு மிகப் பெரிய விவாதங்களை கிளப்பிவிட்ட திரைப்படமாக “கர்ணன்” அமைந்தது.
மாரி செல்வராஜ் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக, மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகர் ஜி.மாரிமுத்து, மாரி செல்வராஜ்ஜின் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“மாரி செல்வராஜ் ஒரு பெரிய ராட்சச இயக்குனர். தன் மனதுக்குள் இருக்கும் சினிமாவை காட்சியாக வரும் வரை விடவே மாட்டார். எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அவர் நினைத்ததை காட்சிப்படுத்தியே தீர்வார். அந்த விதத்தில் மாரி செல்வராஜ்ஜை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என அப்பேட்டியில் கூறியிருந்தார் மாரிமுத்து.
மேலும் பேசிய அவர் “படத்தின் ஹீரோ கதிர் முள் காட்டிற்குள் ஓடி வருவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் வெறும் காலோடு கதிரை ஓடச்சொன்னார். அந்த இடத்தில் பல பீங்கான் கண்ணாடிகள் சில்லு சில்லாக உடைந்து கிடக்கும். அதை எல்லாம் மிதித்துத்தான் கதிர் ஓடினார். அவரது காலில் ரத்தம் வந்துவிடும். ஆனால் அந்த காட்சி சரியாக வராது, மீண்டும் ஓடச்சொல்வார்.
ஒரு காட்சியில் கதிரை நிஜ வாழைத் தண்டால் அடிக்கச் சொன்னார். அவர் உடம்பில் பல இடங்களில் வீங்கிவிட்டது. அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். அதே போல் யாரையாவது கன்னத்தில் அறைவது போன்ற காட்சி இருந்தால் நிஜமாகவே அறையச்சொல்வார். பாசாங்கு காட்டினால் கோபம் வந்துவிடும். ‘பளார்ன்னு அடி, கன்னத்துல அடிச்சா அவன் என்ன செத்துப்போயிடப் போறானா?’ என்று திட்டுவார். அவருக்கு அனைத்துமே நிஜமாக இருக்க வேண்டும்” என்று அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. என்ன இருந்தாலும் ஸ்டிரிக்ட்டாவா இருக்கிறது!
இதையும் படிங்க: மனசாட்சியே இல்லாமல் காப்பியடிக்கப்பட்ட 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்கள்… இது தெரியாம போச்சே…