Cinema News
தனுஷோட நான் பண்ணப்போறது வேற லெவல்ல இருக்கும்!.. ஹைப் ஏத்தும் மாரி செல்வராஜ்!…
Mari selvaraj: இயக்குனர் ராமிடம் சினிமா கற்றவர் மாரி செல்வராஜ். இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். தன்னுடைய இன மக்கள் சந்தித்த பிரச்சனைகளை கதைகளாக எழுதி அதை திரைப்படமாக எடுத்து வருகிறார். அதற்கு பல எதிர்ப்பும், விமர்சனமும் வந்தாலும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
என் மக்கள் பட்ட கஷ்டங்களை தொடர்ந்து திரைப்படமாக எடுப்பேன் என சொல்லி வருபவர். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் பரியேரும் பெருமாள். தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு இளைஞன் கல்லூரியில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறான்? அவனுடன் நட்பாக பழகும் பெண்ணால் அவனுக்கு என்ன ஆகிறது?.. அவனின் தந்தையை எப்படி அவமானப்படுத்துகிறார்கள்? என்றெல்லாம் காட்டியிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினி பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட்!.. வரப்போகும் ஜெயிலர் 2 ப்ரோமோ!.. அதுல ஒரு ஸ்பெஷலும் இருக்கு?!..
இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு விவாதங்களையும் ஏற்படுத்தியது. அதன்பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்குனார் மாரி செல்வராஜ். இதுவும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அரசு பேருந்து நிற்காமல் செல்லும் நிகழ்வை திரைக்கதையாக எழுதி அதிர வைத்தார்.
அதன்பின் உதயநிதி, வடிவேலுவை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார். தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் அரசியலில் ஒரு முக்கிய பதவியில் இருந்தாலும் அவர்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பதை சிறப்பாக காட்டியிருந்தார். இந்த படத்தில் மேல் சாதியை சேர்ந்த அரசியல்வாதியாக பஹத் பாசில் நடித்திருந்தார்.
இந்த படம் நல்ல வசூலை பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான வாழை படமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து பைசன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கபடி விளையாட்டை மையமாக கொண்டது. இந்த படத்திற்கு பின் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ்.
அந்த படம் முடிந்த பின் மீண்டும் தனுஷுடன் கை கோர்க்கவிருக்கிறார். இந்த படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ் ‘தனுஷுடன் மீண்டும் நான் இணையும் படம் ஒரு அதிக பட்ஜெட் கொண்ட பெரிய படமாக இருக்கும். ஏனெனில், இது ஒரு வரலாற்று திரைப்படம்’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: புஷ்பா 2 நிகழ்ச்சியில் பொங்கிய தேவி ஸ்ரீ!.. எதுக்கு அப்படி பேசினாரு?!.. தயாரிப்பாளர் விளக்கம்..!