Connect with us
rajkiran

Cinema History

என் ராசாவின் மனசிலே படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!. மிரண்டு போன ராஜ்கிரண்!…

தமிழ் சினிமாவில் மனதை மயக்கும் பல பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. 80களில் இவரின் இசை ராஜ்ஜியத்தில் மயங்காதவர்களே இல்லை. அப்போது உருவான 90 சதவீத திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசை. இவர் இசையமைத்த எல்லா படங்களிலுமே பாடல்கள் சூப்பர் ஹிட்தான்.

பின்னணி இசையிலும் தான் ஒரு ஜீனியஸ் என காட்டினார் இளையராஜா. இயக்குனர் அந்த படத்தின் மூலம் என்ன சொல்ல ஆசைப்பட்டாரோ அதை விட பல மடங்கு தனது பின்னணி இசை மூலம் சொன்னார் இளையராஜா. அதனால்தான். படத்தை எடுக்கும்போது ‘இது போதும். இதற்கு மேல் ராஜா பார்த்துக்கொள்வார்’ என்கிற நம்பிக்கை அப்போதைய முன்னணி இயக்குனர்களுக்கே இருந்தது.

இதையும் படிங்க: அவன ஒன்னுமே பண்ண முடியாதுய்யா!.. இளையராஜா பாட்டை கேட்டு எமோஷனால் ஆன வைரமுத்து!…

பல மொக்கை படங்களை தனது அற்புதமான இசையால் ஓட வைத்தவர்தான் இளையராஜா. ஒரு படத்தை துவங்கும்போது இளையராஜாவின் இசையை உறுதி செய்து கொண்ட பின்னர்தான் மற்ற வேலையை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் துவங்குவார்கள். அந்த அளவுக்கு அவரின் தேவை முக்கியமான ஒன்றாக இருந்தது.

தமிழ் சினிமாவில் வினியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறியர் ராஜ்கிரண். இவர் தயாரித்து நடித்த திரைப்படம்தான் என் ராசாவின் மனசிலே. இந்த படத்திற்கு இளையராஜாவே இசையமைத்தார். இந்த படத்தில் ராஜ்கிரணோடு இணைந்து வேலை செய்தவர் மறைந்த நடிகர் மாரிமுத்து.

rajkiran

சில மாதங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய மாரிமுத்து ‘என் ராசாவின் மனசிலே படத்தில் வந்த ‘பெண் மனசு ஆழமென்று பாடலே’ கிடையாது. அந்த காட்சிக்கு ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன’ பாடலின் சோக வெர்சன்தான் இருந்தது. அதற்கு ஏற்ப காட்சிகளை படம் பிடித்து எடிட் செய்தும் விட்டார் ராஜ்கிரண்.

ஆனால், ‘அது வேண்டாம். அந்த பாட்டை டைட்டிலில் வைத்துக்கொள். நீங்கள் எடுத்த காட்சிக்கு ஏத்தமாதிரி நான் ஒரு போட்டு போடுறேன்’ என சொல்லி, அந்த காட்சிகளை பார்த்துக்கொண்டே இளையராஜா நோட்ஸ் எழுதினார். அதன்பின் அதற்கு பாடல் வரிகளை அவரே எழுதி பாடியும் கொடுத்துவிட்டார். நான் மிரண்டு போய்விட்டேன். திரையில் பார்த்தால் அந்த காட்சிகளுக்கு ஏத்த மாதிரியே இருக்கும். அது அவரால் மட்டுமே முடியும்’ என மாரிமுத்து பேசி இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top