20 நாளா வீட்டுக்கே வராமல் ஓயாத வேலை… ரெஸ்டே இல்லாத மாரிமுத்து… என்ன நடந்தது?

by Akhilan |
20 நாளா வீட்டுக்கே வராமல் ஓயாத வேலை… ரெஸ்டே இல்லாத மாரிமுத்து… என்ன நடந்தது?
X

Ethir Neechal Marimuthu: ஒரே சீரியல் ஓஹோ வாழ்க்கை என்ற வரிக்கு சமீபத்திய பெர்பெக்ட் எடுத்துக்காட்டாக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. எத்தனை படத்தில் நடித்தாலும், படம் இயக்கினாலும் கிடைக்காத புகழ் ஒரே சீரியல் மூலம் அவருக்கு கிடைத்தது. ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் திடீரென உயிரிழந்தார்.

ராஜ்கிரணிடம் உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து. கிடைத்த பழக்கத்தினை வைத்து இயக்குனர் சரண் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் அசோசியேட்டாக வேலை செய்தார். அதிலும் இவர் புலி வால் மற்றும் கண்ணும் கண்ணும் படங்களை இயக்கியும் இருந்தார். தொடர்ச்சியாக நடிப்பையும் தொடர்ந்து வந்தார்.

இதையும் படிங்க: நூடுல்ஸ்க்கு பதிலாக இத்துப்போன இடியாப்பம்னு வச்சிருக்கலாம்!.. இப்படியா இம்சை பண்ணுவீங்க பாஸ்!..

இத்தனை செய்தும் அவருக்கு கிடைக்காத புகழ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த எதிர்நீச்சல் சீரியலில் கிடைத்தது. குணசேகரன் என்னும் வில்லனாக நடித்தாலும் அவரின் நடிப்புக்கு பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் ரசிகர்களாக இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அவர் திடீரென மாரடைப்பால் இறந்தார். இத்தகவலை பலரும் பொய் என்ற அளவிலேயே பார்த்தனர். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே இந்த தகவல் உண்மை என தெரிய வந்தது. அவர் ஓயாமல் உழைத்ததே இந்த நிலைமைக்கு காரணம் என கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: மார்க் ஆண்டனிக்கு தடைய போடு.. விஷாலின் ஆசையில் மண்ணை போடு… என்னங்க இப்டி ஆச்சு?!

ஏற்கனவே தன்னுடைய ஒரு பேட்டியில் பேசிய மாரிமுத்து இரவு 1 மணி வரை டப்பிங் பேசுவேன் என்றார். அதைப்போல கடந்த 20 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருந்தாராம். தொடர்ச்சியாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும் அவருக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்து இருக்கிறது.

ரெஸ்ட் எடுக்காமல் நேற்று காலையிலும் சீக்கிரமே எழுந்து டப்பிங் சென்றார். இதனால் தான் இந்த நிலைமை வந்துவிட்டதோ என அவரின் வேலைகார பெண் சொல்லி அழுதுக்கொண்டே இருந்தார். தற்போது இதை கேட்ட பலரும் உடம்பும் முக்கியம் என்பதை பிரபலங்கள் மறந்துவிடக்கூடாது என பல பேச்சுக்கள் உருவாகி இருக்கிறது.

Next Story