முட்டாள்களை எல்லாம் ஊசி போட்டு கொன்னுடனும் - நெட்டிசன்களால் கடுப்பான மாரிமுத்து!
தமிழில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் மாரிமுத்து. மாரிமுத்து தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்துள்ளார். பல திரைப்படங்களில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அதில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில்தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த கதாபாத்திரம் தமிழ் சினிமா மக்கள் மத்தியில் ஓரளவு பேசப்படும் கதாபாத்திரமாக இருந்தது. ஆனால் தற்சமயம் இவர் எதிர் நீச்சல் என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் நடிக்கும் குணசேகரன் என்கிற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு பேட்டியில் இதுக்குறித்து பேசும்போது பெண்கள் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும் என குணசேகரன் கதாபாத்திரம் கூறுகிறது. அது தவறுதானே என அவரிடம் கேட்டபோது “பொண்ணுங்க என்றால் குனிஞ்ச தலை நிமிராமல் இருக்கணும். அதுதான் தமிழ் பொண்ணுக்கு அழகு” என பேசியிருந்தார்.
மேலும் அவர் பேசும்போது ”யூ ட்யூப்பில் பலரும் என்னை திட்டுவதை பார்க்க முடிகிறது. நாடகத்தின் வீடியோக்களுக்கு கீழே கமெண்டில் என்னை திட்டி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் அறிவு இருக்கா? என்றே தெரியவில்லை. அது ஒரு நாடகத்தில் வருகிற நடிப்பு என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள்.
இந்த மாதிரி முட்டாள்களை எல்லாம் ஊசி போட்டு கொன்னுடனும். இவங்க எல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா இருக்காங்கன்னு தெரியலை” என பேசியுள்ளார்.