சினிமாவில் துணை இயக்குனர், உதவி இயக்குனராக இருந்து பிறகு துணை கதாபாத்திரங்களில் நடித்து, தற்சமயம் சின்ன திரையில் நடித்து வருபவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகிக்கு அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
ஆனால் இவ்வளவு ஆண்டுகள் சினிமாவில் நடித்ததை விடவும் சீரியலில் நடித்தது மூலம் அதிக வரவேற்பை பெற்றுள்ளார் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர் நீச்சல் நாடக தொடரில் முக்கியமான் கதாபாத்திரமான ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.
வீடுகளில் பெண்களை ஒடுக்கி அடிமையாக வைத்திருக்கும் ஒரு பிற்போக்கு தனமான கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இருக்கும். இந்த நிலையில் மாரிமுத்துவிடம் ஒரு பேட்டியில் இதுக்குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் இவ்வளவு ஒரு பிற்போக்கு தனமான கதாபாத்திரமாக நடிக்கிறீர்கள். அதில் உங்களுக்கு ஏதேனும் ஏற்புடைய கருத்துக்கள் இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
அப்போது மாரிமுத்து கூறும்போது திருமணத்தில் பெண்கள் நடனமாடுவதை நான் எதிர்க்கிறேன். தமிழ் பெண்கள் என்றால் தலை குணிந்து நடப்பதுதான் அழகு. தனது கணவன் நிழலில் தலை குணிந்து வருபவள்தான் பெண். என கூறியுள்ளார். அதற்கு தொகுப்பாளர் “பெண்கள் தலை நிமிர்ந்து நடப்பதில் என்ன பிரச்சனை” என கேட்டுள்ளார்.
அதற்கு மாரிமுத்து ”பெண்கள் ஏன் இன்னமும் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும். அதை ஆண்கள் செய்ய வேண்டியதுதானே” என கூறியுள்ளார். மாரிமுத்துவின் இந்த கருத்து சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…