நான் அப்படி சொல்லவே இல்ல!.. அந்தர் பல்டி அடித்த மாரிசெல்வராஜ்
தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே படம் எடுக்கும் இயக்குனர்கள் சில பேர் இருக்கிறார்கள். வெற்றிமாறன், பா.ரஞ்சித் இவர்கள் தங்கள் படங்களில் வெளிப்படையாகவே கருத்துக்களை கூறியிருப்பார்கள். அந்த வகையில் இயக்குனர் மாரிசெல்வராஜும் இணைந்திருக்கிறார். சொல்லப்போனால் மாரிசெல்வராஜ் வெற்றிமாறன், பா.ரஞ்சித் இவர்களை பின்பற்றி வந்தவர்தான்.
மாரிசெல்வராஜ் இயக்கிய படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை காட்டிய படமாகவே சித்தரித்துக் காட்டியிருப்பார். அந்த வகையில் அவரின் இயக்கத்தில் மாமன்னன் படமும் திரைக்கும் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் தான் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய மாரிசெல்வராஜ் தேவர் மகன் படம் குறித்தும் அந்தப் படத்தில் வெளிப்பட்ட கருத்துக்களால் தான் எந்த அளவு பாதிக்கப்பட்டேன் என்பதை குறித்தும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் தேவர் மகன் படம் முழுக்க முழுக்க உயர் சாதியினருக்கு இணக்கமாக எடுக்கப்பட்ட படம் என்று மாரிசெல்வராஜ் தவறாக புரிந்து கொண்டாரோ என்று கமல் ரசிகர்கள் மாரிசெல்வராஜை திட்டி வருகின்றனர். ஆனால் அந்தப் படம் ஒரு கிராமத்தில் பெரும் புள்ளிகளாக இருக்கும் இரண்டு பேருக்கு இடையே நடக்கும் பிரச்சினையை அடிப்படையாக கொண்டுதான் எடுக்கப்பட்டிருக்கும்.
மேலும் அந்தப் படத்தில் இசக்கியாக வரும் வடிவேலு தான் இந்தப் படத்தில் மாமன்னனாக வருகிறார் என்றும் மாரிசெல்வராஜ் பேசினார். இதன் மூலம் ரசிகர்கள் தேவர் மகனுக்கும் மாமன்னனுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று பேசி வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் மாரிசெல்வராஜ் மறைமுகமாக கமலை தாக்குகிறாரோ என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால் இன்று அளித்த பேட்டியில் மாரிசெல்வராஜ் அப்படியே அந்தர் பல்டி அடித்தார். அதாவது இசக்கிதான் மாமன்னனாக வருகிறார் என்று சொன்னதை எல்லாரும் தவறுதலாக புரிந்து கொண்டார்கள் என்று கூறினார். மேலும் ஒரு காமெடி நடிகரான வடிவேலு தேவர் மகன் படத்தில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இதையும் படிங்க : பாவனாவுடன் பலான உறவு!.. வெளிப்படையாக பேசிய மிஷ்கின்.. அப்பவே அவர் அப்படித்தான்!…
அதனால் தான் இந்த மாமன்னன் திரைப்படத்திற்கு வடிவேலுவின் அந்த நடிப்பு இருந்தால் சரியாக இருக்கும் என நினைத்து வடிவேலுவை கமிட் செய்து நடிக்க வைத்தோம். மற்ற படி இசக்கி தான் மாமன்னன் என்பது இல்லை என்றும் தேவர்மகனுக்கும் மாமன்னனுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் மாரிசெல்வராஜ் கூறினார்.