Cinema News
டேய் நான் சொன்னதே வேறடா!. போதும் நிறுத்துங்கடா!.. தலையில் அடித்து புலம்பும் மாரி செல்வராஜ்!…
தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சந்தித்த வேதனைகளை, அவர்களுக்கு நடந்த அநீதிகளை சினிமாவில் பதிவு செய்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். ஊடகங்களில் பேட்டி கொடுத்தாலும் ‘எல்லாரும் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குகிறார்கள்.. அமுக்குகிறார்கள்’ என்றுதான் பேசுவார். இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திலேயே தான் என்ன மாதிரியான இயக்குனர் என்பதி நிரூபித்தார். ஒடுக்கப்பட்ட மக்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என காட்டியிருந்தார்.
அடுத்து தனுஷை வைத்து அவர் இயக்கிய கர்ணன் படத்திலும் அதைத்தான் பேசியிருந்தார். கதைக்களங்கள்தான் வேறே தவிர அவர் சொல்ல வருவது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை இந்த சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பதுதான் அவரின் அனைத்து படங்களின் அடிநாதமாக இருக்கிறது. அப்படி அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் மாமன்னன்.
இந்த படத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாமன்னன் வடிவேலு எம்.எல்.ஏ.வாக இருந்தும், மேல் சாதியை சேர்ந்த ஃபகத் பாசில் முன் அமராமல் நின்று கொண்டிருப்பார். இதுதான் அப்படத்தின் அடிநாதம். ரத்தினவேல் என்கிற கதாபாத்திரத்தில் சாதி ஆதிக்க வெறி பிடித்தவராக ஃபகத் பாசில் நடித்திருந்தார். படத்தின் இறுதியில் அவர் தோற்றுப்போவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது. எல்லோர் முன்பும் நின்று கொண்டிருந்த மாமன்னன் வடிவேலு இறுதியில் சபாநாயகராக அமர்வார். அவரை பார்த்து எல்லோரும் எழுந்து வணக்கம் சொல்வார்கள். இதுதான் மாரி செல்வராஜ் சொல்ல வந்தது. தியேட்டரில் வெளியான போது ரசிகர்களிடம் இது சரியாக போய் சேர்ந்தது.
ஆனால், சமீபத்தில் இப்படம் ஓடிடியில் வெளியான பின் சாதி ஆதிக்கவெறி பிடித்த அந்த ரத்தினவேல் கதாபாத்திரத்தை கையில் எடுத்த பலரும் அவர் எங்கள் சாதிதான் என பெருமையாக சொல்வது போல, தங்களின் சாதி பாடலை அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து வீடியோவாக உருவாக்கி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர். பல சாதிக்காரர்களும் இதையே செய்ய மாரிசெல்வராஜ் சொல்ல வந்த கருத்தே நீர்த்துப்போனது.
அதோடு, அவர்கள் எல்லோரும் #fahadfazil என்கிற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டிங் செய்ய கடந்த 2 நாட்களாக இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. சாதி ஆதிக்க வெறியர்களுக்கு எதிரான படம்தான் மாமன்னன். ஆனால், ஃபகத் பாசில் கதாபாத்திரத்தையே தங்களின் ஹீரோவாக்கி பல சாதியினர் கொண்டாடி வருவதை பார்த்த மாரிசெல்வராஜ் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். நாம் சொல்ல வந்தது என்ன?.. இவர்கள் புரிந்து கொள்வது என்ன? என்பதே புரியாமல் அவரே குழம்பி போயிருக்கிறாராம்.
இதையும் படிங்க: இந்த அநியாயம் பண்றீங்களேடா!.. விஷயம் புரியாம வச்ச ‘மாமன்னன்’ கவர் போட்டோவை ரிமூவ் பண்ண ஃபகத் பாசில்!..