Connect with us

மாஸ் படத்தில் மாஸா ஒரு சீன்!….பாலிவுட்டிலும் கெத்து காட்டும் தளபதி….

vijay_main_cine

Cinema News

மாஸ் படத்தில் மாஸா ஒரு சீன்!….பாலிவுட்டிலும் கெத்து காட்டும் தளபதி….

இயக்குனர் அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் திரைஉலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து, தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை வரிசையாக இயக்கி மாஸ் காட்டி உள்ளார்.

அட்லீ

தற்போது மீண்டும் நான்காவது முறையாக விஜய் – அட்லீ காம்போ இணைய உள்ளது குறித்து சூப்பர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜயின் 65 ஆவது படமான, ‘பீஸ்ட்’ படம் திரையில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை, அடுத்து தளபதி 66 ஆவது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் விஜய் தன்னுடைய 67 ஆவது படத்தை யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை,எனினும் லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், 68 ஆவது படத்தை அட்லீ இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா, ஹீரோயினாக நடிக்க உள்ளார்.பூனேவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீயின் பாலிவுட் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் ஷாருக்கான் விஜய்க்கு மிகவும் பிடித்தவர் என்பதாலும் விஜய் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

மேலும் அட்லீ இயக்க இருக்கும் தளபதி 68 படம் பான் இந்தியா படமாக உருவாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top