மாஸ்டர் படத்துல இந்த கேரக்டர் சூர்யாவுக்கு எழுதுனதாம் ! - நடிச்சிருந்தா மாஸா இருந்துக்கும் !

by Rajkumar |   ( Updated:2022-06-02 04:35:10  )
surya_main_cine
X

தமிழ் திரையுலகில் இயக்குனர் லேகேஷ் கனகராஜ்க்கு முக்கியமான படமாக அமைந்த திரைப்படம் மாஸ்டர்.

இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு வித்தியாசமான திறன் இருக்கும். அவரது கையை கொண்டு யாரை அடித்தாலும அவர்கள் எலும்பு நொறுங்கி இறந்துவிடுவார்.

இந்த கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நடிகர் சூர்யாவுக்காக உருவாக்கி இருந்தாராம். நடிகர் சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்கிற திரைப்படத்தை இயக்க இருந்தார்.

இரும்புக்கை மாயாவி என்பது ஒரு காமிக்ஸ் கதாபாத்திரம் ஆகும். அவரது ஒரு கை மட்டும் இரும்பில் இருக்கும். மேலும் மின்சாரத்தை அந்த இரும்பு கைகள் கொண்டு தொட்டால் அவர் மாயமாகி விடுவார்.

இந்த கதையை அடிப்படையாக கொண்டு சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி திரைப்படம் எடுக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை அப்போது எடுக்க முடியவில்லை.

லோகேஷ்க்கு இந்த இரும்பு கை மாயாவி கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த இரும்புக்கை சக்தியை விஜய் சேதுபதிக்கு வைத்திருந்தார்.

ஒருவேளை அந்த கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைத்திருந்தாலும் படம் நன்றாகவே இருந்திருக்கும்.

விக்ரம் திரைப்படத்தில் சூர்யா சிறப்பு கதாபாத்திரமாக வருவதாக கூறப்பட்டுள்ளது. அதுவே விக்ரம் திரைப்படத்தின அடுத்த பாகத்திற்கு துவக்கமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இதில் சூர்யா இரும்பு கை மாயாவியாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story