அடுத்தடுத்து சாதனை படைக்கும் மாஸ்டர்... மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்....!
ஒரு சில நடிகரின் படங்களுக்கு விளம்பரம் செய்யவே தேவையில்லை. அந்த நடிகரின் பெயரே போதும். அந்த வகையில் தளபதி விஜய் என்ற ஒற்றை பெயரை சொன்னாலே போதும் அந்த படம் தாறுமாறாக வெற்றி பெற்றுவிடும். அந்த அளவிற்கு விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். அதுவும் சாதாரண ரசிகர்கள் அல்ல வெறித்தனமான ரசிகர்கள்.
தற்போது அனைவரும் அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் அப்டேட்டிற்காக காத்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் சத்தமில்லாமல் பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் மாஸ்டர் படம் தான் டிரண்டிங்கில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படங்கள், அதிகமாக பார்க்கப்பட்ட படங்கள் போன்ற பட்டியல் வெளியாகும். அந்த வரிசையில் இந்த ஆண்டு அதாவது 2021ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் மாஸ்டர் படம் தான் முதல் இடத்தில் உள்ளது.
இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் மாஸ்டர் படம் மற்றொரு சாதனையை செய்துள்ளது. அதன்படி 2020 ஆம் ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் ஆல்பம் மாஸ்டர் படத்தின் பாடல்கள் தானாம். இந்த தகவலை மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி, மாஸ்டர் தி பிளாஸ்டர் ஆகிய பாடல்கள் ரசிகர்களின் பேவரைட் பாடல்களாக உள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் அடுத்தடுத்து சாதனைகளை செய்து வருகிறது.