Connect with us
banner

இதுவரை 30 கோடி நஷ்டம்.! தலையில் அடித்துக்கொள்ளும் மாஸ்டர் தயாரிப்பாளர்.!?

Cinema News

இதுவரை 30 கோடி நஷ்டம்.! தலையில் அடித்துக்கொள்ளும் மாஸ்டர் தயாரிப்பாளர்.!?

சியான் விக்ரமுக்கு இது கொஞ்சம் கெட்ட காலம் போல, அவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் வருடக்கணக்கில் ஷூட்டிங் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படித்தான் மகான் திரைப்படம் அமைந்தது. அதன் பிறகு கோப்ரா.

இந்த படத்தின் ஷூட்டிங்கும் வருடக்கணக்கில் சென்றது. இந்த படத்தை, தளபதி விஜய் நடித்து மெகா ஹிட்டான மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தான் தயாரித்து இருந்தார்.

கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறிய பட்ஜெட்டை விட கோப்ரா தாண்டி சென்றுவிட்டதாம். அதிலும் , குறிப்பாக இந்த திரைப்பட பட்ஜெட் 80 கோடியை தண்டி செலவாகி விட்டதாம்.

இதையும் படியுங்களேன் – விஜய், அஜித் கூட செய்யாத சாதனை!.. தட்டி தூக்கிய டான் சிவகார்த்திகேயன்.!

இந்த திரைப்படம் தற்போது தியேட்டர் உரிமம், சாட்டிலைட் உரிமம், OTT  உரிமம் என வியாபாரம் செய்தாலும், 30 கோடி நஷ்டத்தை தான் கோப்ரா  தற்போது கொடுக்குமாம். படம் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை ஈட்டினால் மட்டுமே படத்தை தயாரித்த லலித்குமாருக்கு லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top