லாரன்ஸ் பிரபு தேவாவை தொடர்ந்து இயக்குனராக களமிறங்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர்… ஹீரோ யார்ன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!

Published on: March 17, 2023
Sathish
---Advertisement---

தென்னிந்திய சினிமாவில் நடன அமைப்பாளர் ராகவா லாரன்ஸ் ஒரு மிக முக்கிய இயக்குனராக திகழ்ந்து வருகிறார். அதே போல் இந்திய அளவில் நடன அமைப்பாளர் பிரபு தேவா ஒரு முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். இவர்களை தொடர்ந்து தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபல நடன இயக்குனர் தற்போது இயக்குனராக களமிறங்கவுள்ளார்.

நடன இயக்குனர் சதீஷ்

 “உன்னாலே உன்னாலே”, “வாரணம் ஆயிரம்”, “நீதானே என் பொன்வசந்தம்”, “தலைவா” போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர் சதீஷ்.

Sathish
Sathish

“மாஸ்டர்”, “ஆர்ஆர்ஆர்”, “பிரின்ஸ்” போன்ற பல திரைப்படங்களில் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில்தான் சதீஷ் இயக்குனராக களமிறங்கவுள்ளார்.

“வலிமை”, “நெஞ்சுக்கு நீதி”, “வீட்ல விசேஷம்”, “துணிவு” ஆகிய திரைப்படங்களில் இணை தயாரிப்பில் பணியாற்றிய ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சதீஷ் இயக்கும் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

“டாடா” புகழ் கவின்

சின்னத்திரையில் மிக முக்கிய நடிகராக வலம் வந்த கவின், “பீட்சா”, “இன்று நேற்று நாளை”, “சத்ரியன்”, “நட்புன்னா என்னன்னு தெரியுமா?” ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

Kavin
Kavin

இதனை தொடர்ந்து “லிஃப்ட்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் கவின். சமீபத்தில் கவின் நடித்த “டாடா” திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய பாராட்டுக்களை பெற்றுத்தந்தது.

தற்போது கவின், “ஊர்க்குருவி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்துதான் சதீஷ் இயக்கும் திரைப்படத்தில் கவின் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: இவர் மட்டும் இல்லைன்னா விக்னேஷ் சிவன் காணாமல் போயிருப்பார்-பிரபல பத்திரிக்கையாளர் ஓப்பன் டாக்…