சொதப்பல்!.. மலேசியால் தவித்த மாவீரன் படக்குழு!.. இதுக்குதான் பிளான் பண்ணி பண்ணனும்!...
சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் மாவீரன். யோகிபாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோனே அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வருகிற 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா சென்றனர். ஆனால், சரியான திட்டமிடல் இல்லாமல் எல்லாமே சொதப்பி கடைசியில் நிகழ்ச்சியே நடைபெறாமல் போனது படக்குழுவினருக்கு சோகத்தை ஏற்படுத்திவிட்டது.
பொதுவாக வெளிநாடுகளில் ஒரு படக்குழு புரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்கிறது எனில் அந்த படத்தை அந்த நாட்டில் வெளியிடும் வினியோகஸ்தரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவார்கள். எனவே, படக்குழு விமான நிலையத்தில் இறங்கும்போது அவர்களை பிக்கப் செய்து ஹோட்டலில் தங்க வைத்து பத்திரிக்கையாளர்களையும், ரசிகர்களையும் நிகழ்ச்சிக்கு வரவரவழைத்து, நிகழ்ச்சியை நடத்தி படக்குழுவை அனுப்பி வைக்கும் வரைக்கும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
இதையும் படிங்க: ப்ப்பா!. என்னா உடம்புடா சாமி!.. பளிங்கு மேனியை காட்டி வெறியேத்தும் கீர்த்தி ஷெட்டி…
ஆனால், மலேசியாவில் நடந்த மாவீரன் பட புரமோஷன் விழாவுக்கு அங்குள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளிடமும், சென்னையில் உள்ள ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்டிடமும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டனர். இதில் எல்லாமே சொதப்பிவிட்டது. சிவகார்த்திகேயன் விமான நிலையத்தில் இறங்கினால் அவரை கூட்டி செல்லக்கூட ஒரு கார் வரவில்லையாம். படக்குழுவே ஒரு டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்கு சென்றுள்ளது. அங்கு சென்று பார்த்தால் ஒரு சாதாரண ஹோட்டலில் அறையை புக் செய்து வைத்திருந்தார்களாம். இதில், சிவகார்த்திகேயன் டென்ஷன் ஆகிவிட்டாரம். இதெல்லாம் கூட பரவாயில்லை.
மலேசிய சட்டப்படி புரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் காலிங் விஷா-வை எடுக்க வேண்டும். ஆனால், சிவகார்த்திகேயன் சென்றது சுற்றுலா விஷாவில். எனவே, நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த மலேசிய அதிகாரிகள் ‘நிகழ்ச்சியை நடத்தினால் உங்களை கைது செய்வோம்’ என எச்சரிக்க படக்குழு அதிர்ந்து போயிருக்கிறது. அதன்பின், மலேசியாவில் மாவீரன் படத்தை ரிலீஸ் செய்யும் வினியோகஸ்தரின் உதவியை நாடியுள்ளது. அவரின் அறிவுத்தலின் பேரில் செய்தியாளர் சந்திப்பை மட்டும் நடத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பிவிட்டது.
அடுத்து புரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழு துபாய்க்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களின் குரலில் உருவான எம்.ஜி.ஆரின் பாடல்.. அது என்ன தெரியுமா..?