Categories: Cinema News latest news

விஜயகாந்துக்கு ஜோடின்னா தலைதெறிக்க ஓடிய நடிகைகள்!.. ராதிகா செய்த மேஜிக்..

தமிழ் சினிமாவில் அழகு மட்டுமே முதலில் பார்க்கப்படுகின்றன. திறமைக்கு யாரும் மதிப்பே கொடுப்பதில்லை. அந்த வகையில் அழகு இல்லைனாலும் தன்னுடைய முழு திறமையால் முன்னுக்கு வந்த எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் இந்த சினிமா உலகத்தில் சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினியை சொல்லலாம், அடுத்ததாக விஜயகாந்தை சொல்லலாம். இவர்கள் இருவரும் சினிமாவிற்குள் வரும் போது கடும் விமர்சனத்திற்கு ஆளானார்கள். ஏனெனில் நிறத்தை வைத்து பெருமளவு விமர்சிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக விஜயகாந்த் ஆரம்பகாலத்தில் கரு கருவென பார்க்கவே வித்தியாசமாக இருப்பாராம். அதனாலேயே பல நடிகைகள் இவருடன் நடிக்கமாட்டேன் என்று சொல்லி மறுத்திருக்கிறார்களாம். அதில் குறிப்பாக நடிகை அம்பிகா விஜயகாந்த் படம் என்றாலே முடியவே முடியாது என சொல்லிவிடுவாராம். இதை பற்றி பிரபல விமர்சகர் காந்தராஜ் கூறும் போது,

இதையும் படிங்க : விடாமுயற்சி கதை பிடிக்கவில்லை.. கதையை மாற்ற சொன்ன அஜித்.. மறுபடியும் மொதல்ல இருந்தா..

அம்பிகாவின் மேனேஜர்தான் யார் ஹீரோ என்றெல்லாம் கேட்கமாட்டாராம். விஜயகாந்த் ஹீரோ இல்லைல என்றுதான் பேச்சை தொடங்குவாராம். அந்தளவுக்கு கேப்டன் அப்பொழுது பார்க்க அழகாக இருக்கமாட்டாராம்.ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ரஜினி, கமலுக்கு இணையாக போட்டி போட்டுக் கொண்டு வேங்கையாக பறந்து வந்தார்.

அதன் பிறகே அம்பிகா பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். விஜயகாந்துடன் துணிந்து நடித்தது ராதிகா மட்டும்தானாம்.  அவரும் துவக்கத்தில் விஜயகாந்துடன் நடிக்க தயங்கியவர்தான். ஒருகட்டத்தில் நடிக்க துவங்கினார். மேலும் அவரை ஸ்டைலாகவும் ஒரு ஜென்டில்மேன் லுக்கிலும் மாற்றியதே ராதிகாதான் என்று சொல்வார்கள்.

இதையும் படிங்க : அந்த விஷயத்துல எப்பவுமே விஜய் தான் டாப்!! ரஜினியால கூட முந்தவே முடியாதாம்!

அப்படி மாறிய பிறகுதான் ஏராளமான படங்களில் நடிக்க விஜயகாந்தை தேடி பல நடிகைகள் வந்தனர்.அதே மாதிரி நடிகை நதியாவும் ஒருவர்.இந்த மாதிரி சம்பவம் இந்த தலைமுறை மட்டும் இல்லை. ஆரம்பகாலத்தில் இருந்தே இருக்கின்றன.

ஒரு பிரபல நடிகராகவோ நடிகையாகவோ மாறிவிட்டால் அவர்கள் சொல்வதை தான் கேட்கவேண்டிய கட்டாயத்திற்கு சினிமா உலகம் தள்ளப்படுகிறது. அப்படி இருக்கும் போது இதெல்லாம் நடப்பது சகஜம் தான்.

Published by
Rohini