விஜயின் கொள்கை பரப்பு செயலாளரே திரிஷாதான்! ‘கோட்’ படத்துல இத கவனீச்சீங்களா?

trisha 1
Goat Movie: அரசியலில் முழுவதுமாக இறங்குவதற்கு முன் விஜய் நடிக்கும் கடைசி இரண்டு படங்களாக கோட் திரைப்படம் அடுத்து அவர் நடிக்கும் 69ஆவது திரைப்படமும் இருக்கும். இதில் கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதிலும் இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் விஜயின் படங்களை கொண்டாடும் ரசிகர்கள் கோட் திரைப்படத்தை மட்டும் அந்த அளவுக்கு விரும்பவில்லை. தமிழ்நாடு ரசிகர்கள் மட்டுமே கோட் திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: மாஸ் மாஸ்… போட்றா வெடிய… தளபதி69க்கு சூப்பர்ஹிட் வில்லன்… நடந்தா நல்லா இருக்குமே!
ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருக்கும் நிலையில் கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் எதிர்பார்த்த வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. பல கேமியோ ரோல்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் ஒரு சிறிய காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி விட்டு போவார். திரிஷா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். மற்றபடி கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அஜித் இவர்களுடைய ரெஃபரன்ஸ்கள் படத்தில் ஆங்காங்கே இருந்தன.
இதையும் படிங்க: டேக் ஆஃப் ஆகும் ‘சிம்பு 48’ திரைப்படம்! அதற்கு காரணமான நடிகர் யார் தெரியுமா?
இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் கோட் திரைப்படத்தை பற்றியும் விஜயை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். விஜய் அடுத்து நடிக்கப் போகும் 69 வது படத்திற்கு பிறகு முழுமூச்சாக அரசியலில் இறங்க இருக்கிறார்.
இந்த கோட் திரைப்படத்தின் மூலம் தனது கட்சி கொடியையும் வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய். ஏற்கனவே கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினாலும் முதன் முதலில் அந்த கொடியை அறிமுகப்படுத்தியது த்ரிஷாவை வைத்துதான் என்று கே ராஜன் கூறியிருக்கிறார்.
அவருடைய கட்சிக்கொடி மஞ்சள் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதே கலரில் தான் திரிஷா இந்த பாடலுக்கு கோட் படத்தில் நடனமாடி இருக்கிறார். அதனால் முதன் முதலில் திரிஷாவை வைத்து தான் அவருடைய கட்சிகொலையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் விஜய்.
இதையும் படிங்க: என்னை யாருமே நம்பலை… மங்காத்தாக்கு முன்னரே அஜித் செய்த பெரிய உதவி.. சர்ப்ரைஸ் சொன்ன வெங்கட் பிரபு
சொல்ல முடியாது. விஜயின் கொள்கை பரப்புச் செயலாளராக கூட த்ரிஷா மாறலாம் .அது சினிமாவிலா எப்படியா என்று போற போக்கில் தான் தெரியும் என்றும் கே ராஜன் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல படத்தில் அவருக்கு காந்தி என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் காந்தி என்பது அந்த மகாத்மாவை குறிக்கும். காந்திக்கு மறு பெயர் ஒழுக்கம் . ஒழுக்க நெறியோடு வாழ்ந்தவர்தான் காந்தி. ஆனால் இந்த படத்தில் அந்த ஒழுக்கத்தையா காட்டியிருக்கிறார் விஜய். ஐந்து சதவீதம் கூட அந்த ஒழுக்கம் இல்லையே. பிறகு எப்படி அந்தப் பெயர் அவருக்கு பொருந்தும் இன்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் கே ராஜன்.