பாவம் பணப்பெட்டியும் போச்சு!.. டைட்டிலும் போச்சு.. இந்த வாரம் பிக் பாஸ் டபுள் எவிக்‌ஷனில் சிக்கிட்டாரே!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 ஒரு வழியாக இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது. இதுவரை வந்த சீசனிலேயே வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கு அதிக மவுசு கிடைக்கும் அளவுக்கு மொக்கையான போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட சீசன் இதுதான் என்று ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேட் ஆகாமல் நேரடியாக டிக்கெட் டு ஃபினாலேவை வென்று விஷ்ணு இறுதி வாரத்துக்குள் நுழைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து இந்த வாரம் நாமினேட் ஆன அர்ச்சனா, மணி, விசித்ரா, பூர்ணிமா ரவி, தினேஷ், விஜய் வர்மா மற்றும் மாயா உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்த நிலையில் திடீரென பணப்பெட்டி டாஸ்க் இடம் பெற்றது.

இதையும் படிங்க: வடிவேலுவை திட்டுற உரிமை அந்த ஒரு நடிகருக்குத்தான் உண்டு! வேற எவனுக்கும் இல்ல – பகீர் கிளப்பிய காமெடி நடிகர்

பணப்பெட்டியை யாரும் தூக்காமல் பணத்தை அதிகரித்துக் கொண்டே செல்ல விட்டு வந்தனர். 13 லட்சத்துக்கு மேல் பணத்தின் மதிப்பு சென்ற போது பணப்பெட்டியின் மீது சில பார்வை விழுந்தது. ஆனால் 16 லட்சம் ரூபாய் வரை வந்து யாரும் எடுக்காத நிலையில், இதற்கு மேல் போனால் யாராவது எடுத்து விடுவார்கள் என நினைத்த பூர்ணிமா ரவி பதினாறு லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

மீதமுள்ள ஆறு பேரில் கிராண்ட் பினாலே வாரத்துக்குள் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க: லோகேஷ் மேல அப்படி கேஸ் போட்டதே காமெடியா இருக்கு!.. மாநகரம் பட நடிகர் என்ன சொன்னார் தெரியுமா?..

இதுவரை நடத்தப்பட்ட தனியார் கருத்துக்கணிப்புகளில் அதிக வாக்குகளுடன் அர்ச்சனா முதலிடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து மணி, தினேஷ், விசித்ரா உள்ளிட்டோர் சேஃப் ஜோனில் இறுதி வாரத்துக்கு செல்லக்கூடிய இடத்தை பிடித்துள்ளனர்.

குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் மாயா மற்றும் விஜய் வர்மா சிக்கித் தவிக்கின்றனர். இதெல்லாம் தெரிந்து இருந்தால் பூர்ணிமாவுக்கு முன்பாகவே மாயா பெட்டியை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றிருப்பார் இப்போ பணப்பெட்டியும் போச்சு பேராசைப்பட்ட பிக் பாஸ் டைட்டில் வின்னர் கோப்பையும் போச்சு என பிக் பாஸ் ரசிகர்கள் மாயாவை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர்.

கடைசி நேரத்தில் கமல்ஹாசன் இந்த வாரமும் மாயாவை காப்பாற்றி விட்டால் என்ன செய்வது என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

 

Related Articles

Next Story