கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி தற்போது வரை வசூலில் ஆட்டிப்படைத்து வரும் திரைப்படம் விக்ரம். உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய இத்திரைப்படம் பலரது பாராட்டுக்களை பெற்று தற்போதும் அனைத்து திரையரங்கிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்த்து மற்ற கதாபாத்திரங்களும் ரசிகர்கள் நினைவில் இருக்கும் வகையில் வடிவமைக்க பட்டிருந்தன. அதுவே இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது.
படத்தில் முக்கியமாக இளைஞர்களை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது அந்த விலைமாது கதாபாத்திரத்தில் வரும் மாயா கிருஷ்ணன் கதாபாத்திரம் தான். அதுவும் அவர் அந்த அறைக்குள் எழுப்பும் ‘ஹாஹூ’ சத்தம், அதோடு சேர்ந்து அநிருத் இசையமைத்த அந்த சொல்ல முடியாத தீம் மியூசிக் அந்த காட்சியை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது.
அந்த ஒரு காட்சியில் நடித்து மாயா மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூற வேண்டும். ஆனால் அவர் கடந்த காலங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடி மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். அதனை அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஒரு நேர்காணலில் பேசியே, மாயா கிருஷ்ணன், ஆடுகளம் திரைப்படம் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கு வயது 22 இருக்கும். அப்போது எப்படி சினிமாவில் வாய்ப்பு கேட்பது என்று தெரியாது. ஆதலால் எனது நண்பர்கள் மூலம் பல்வேறு இயக்குனர்கள் நம்பர் வாங்கி அவர்களுக்கு திடீரென கால் செய்து கதாபாத்திரம் இருக்கிறதா என்று கேட்பேன்.
இதையும் படியுங்களேன் – சண்டை காட்சியில் தவறி விழுந்த அஜித்.! படம் டிராப்.!? வேதனையின் உச்சத்தில் இயக்குனர்.!
அப்படித்தான் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் கால் செய்து விட்டேன். அந்த சமயம் ஆடுகளம் ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்தது. ஆனால், அவர் பவ்வியமாக, ‘தற்போது நாங்கள் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டோம். அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறோம்.’ என்று பணிவாய் கூறினாரம். ஆரம்ப காலகட்டத்தில் என்னவென்று தெரியாமல் இப்படிப்பட்ட பலவிதமான முட்டாள்தனமான செயல்களில் நான் ஈடுபட்டுள்ளேன்.’ என்று வெளிப்படையாக தனது அனுபவங்களை அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் நடிகை மாயா கிருஷ்ணன்.
நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…