அஜித்தை பற்றி உருகி பேசிய மயில்சாமி!.. அப்படி என்ன செஞ்சாரு?.. வைரலாகும் வீடியோ..
சில தினங்களுக்கு முன் தன் இறப்பின் மூலம் தமிழ் சினிமாவிற்கே சோகத்தை விட்டுச் சென்ற நடிகர் மயில்சாமி. அவர் இருக்கிற வரைக்கும் அவர் செய்த உதவிகள் வெளியில் தெரியாமல் இருந்தன. ஆனால் அவர் மறைவிற்கு பின் மனுஷன் இப்படியெல்லாமா இருப்பாரு? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு பல பேருக்கு உதவிகளை செய்து விட்டு சென்றிருக்கிறார்.
அவர் நினைத்ததை அவர் செய்ய விரும்பியதை இனி நான் ஏற்று செய்வேன் என்று அவர் மகன் கூறிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. வீட்டிலேயே இருக்கமாட்டாராம் மயில்சாமி. வெளியில் சாதாரண மக்களோடு மக்களாக யாருக்காவது உதவி தேவைப்படுகிறதா என்ற நோக்கிலேயே தான் சுற்றிக் கொண்டிருப்பாராம்.
இப்பொழுது அவரைப் பற்றிய பல வீடியோக்கள் வைரலாகி வருகின்ற நிலையில் ஒரு சமயம் அஜித்தை பற்றி மயில்சாமி உருகி பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகின்றது. அஜித்துடன் ‘வேதாளம்’, ‘வீரம்’ போன்ற சில படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் மயில்சாமி. படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திடம் தான் கண்ட அந்த நல்ல விஷயம் என்ன என்பதை கூறியிருக்கிறார்.
படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திடம் மயில்சாமி ‘சார் எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவருக்கும் உங்களை பிடித்திருக்கிறது’ என்று கூறினாராம். ஆனால் அஜித் இதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினாராம். மேலும் ‘உண்மையிலேயே சார், உள்ள இருக்கிற உங்களுக்கு தெரியாது, வெளியில் இருந்து பார்க்கிற எனக்குத் தான் தெரியும், அத்தனை பேருக்கும் பிடிக்கிறது ’ என்று கூறினாராம்.
இவர் சொன்ன இரண்டு மாதங்கள் கழித்து நடிகர் சோ வும் இதே கருத்தை தான் பேட்டியில் கூறினாராம். அதனை தொடர்ந்து போஸ்டரிலும் ரசிகர்கள் ஒரு சைடு எம்ஜிஆர் புகைப்படம் மறு சைடு அஜித் புகைப்படம் என போஸ்டரில் விளம்பரம் பண்ணியிருந்தார்களாம். அதை பார்த்ததும் மயில்சாமிக்கு அப்படி ஒரு சந்தோஷமாம். தான் சொன்னது அப்படியே நடக்கிறது என்று ஆனந்தப்பட்டாராம்.
மேலும் அஜித்தை பற்றி அவர் கூறியது ‘அஜித் எத்தனை பேருக்கு உதவிகளை செய்து வருகிறார். ஆனால் அதை இன்று வரை அவர் விளம்பரப்படுத்தவில்லை, தான் தான் செய்தோம் என்றும் சொன்னதில்லை’ என்று அஜித்தை பற்றி உருகி பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. ஆனால் அவர் மறைவிற்கு அஜித் உட்பட பல முன்னனி நடிகர்கள் வராதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இதையும் படிங்க : ஒரு லட்சத்துக்கு எத்தனை சைபர்?!.. அது கூட தெரியாமல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி!…