இதுவரை யாருக்கும் கிடைக்காத மரியாதை!.. மயில்சாமிக்கு செய்து கவுரவித்த அறக்கட்டளை நிர்வாகம்..
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அனைவரையும் மகிழ்வித்தவர் நடிகர் மயில்சாமி. இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இவரது மறைவிற்கு பல பிரபலங்கல் நேரிடையாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.
ரஜினி, விஜய்சேதுபதி, சூரி, செந்தில், மன்சூர் அலிகான் போன்ற பல நடிகர்கள் வந்து தங்கள் இரங்கலை தெரிவித்தனர். தீவிர சிவபக்தராக இருந்த மயில்சாமி சரியாக சிவராத்திரி நாளில் இறந்திருப்பது ஒரு விதத்தில் சோகத்தை தந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியத்தை தந்திருக்கிறது.
சிவனடி சேர்ந்தார் என்பது சரியாக மயில்சாமிக்கு தான் பொருந்தும். சிவராத்திரி அன்று சென்னை கேளம்பாக்கத்திற்கு அருகே இருக்கும் மேலக்கோட்டையில் உள்ள மேக நாதீஸ்வரர் கோயிலுக்கு சென்று இரவு முழுவதும் வழிபாடு செய்திருக்கிறார். கூடவே திரைப்பிரபலம் டிரம்ஸ் சிவமணியின் கச்சேரியும் நடந்திருக்கிறது.
இருவருமே சேர்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் வைரலாகிக் கொண்டிருந்தன. இந்த நிலையில்
வழிபாடுகள் எல்லாம் முடிந்து வீடு திரும்பும் வழியில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி இறந்து விட்டார். ஏற்கெனவே மாரடைப்பு வந்து அதற்கான சிகிச்சைகள் எல்லாம் செய்து வந்த நிலையில் மயில்சாமியின் இந்த மரணம் அனைவரையும் அதிர்ப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதையும் படிங்க : மறுநாள் பதவியேற்பு விழா!. ஆனால் முதல் நாள் எம்ஜிஆர் எங்கு இருந்தார் தெரியுமா?..
மேலும் பல வருடங்களாக அந்த கோயிலுக்கு திருப்பணி ஆற்றியவராம் மயில்சாமி. அதனால் அவரின் ஆத்மா சாந்தியடைய அந்த கோயில் நிர்வாகம் சிவன் சிலை இருக்கும் கருவறைக்குள் மயில்சாமியின் புகைப்படத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அர்ச்சனைகள் செய்திருக்கின்றனராம். சிவராத்திரி நாளில் மரணித்த மயில்சாமிக்கு கிடைத்த சரியான அங்கீகாரம் என்று பல பேர் கூறிவருகின்றனர்.