பாலச்சந்தரையே ‘வா.. போ’ என பேசிய காமெடி நடிகர்!.. ஆனாலும் ரொம்ப தைரியம்தான்!..

நாடகங்களை இயக்கி வந்தவர் பாலச்சந்தர். ஒரு கட்டத்தில் திரைப்படங்களை இயக்க துவங்கினார். மிகவும் திறமையான இயக்குனர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 60,70 களில் வித்தியாசமான, புதுமையான, யாரும் தொட தயங்கும் கதைகளை வைத்து திரைப்படங்களை இயக்கியவர்.

குறிப்பாக கதாநாயகி என்றால் கதாநாயகர்களுடன் டூயட் பாட மட்டுமே என இயக்குனர்கள் நினைத்த அந்த காலத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்தும் உள்ள கதைகளை எழுதி திரைப்படங்களாக எடுத்து புரட்சி செய்தவர் இவர். அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், அவர்கள், தப்புத்தாளங்கள், அக்னி சாட்சி, மன்மதலீலை, ஒரு வீட்டு இரு வாசல், கல்யாண அகதிகள், தண்ணீர் தண்ணீர், மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி என பல திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் எடுத்து படங்களை இயக்கினார்.

இதையும் படிங்க: எல்லாம் வதந்தி! எதையும் நம்பாதீங்க – அவரே சொல்லிட்டாரு! ஏகே 63 பற்றிய புதிய அப்டேட்

ரஜினியை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர், கமலை ஒரு முழு நடிகராக உருவாக்கியவர் என்கிற இரண்டு முக்கிய பெருமை இவருக்கு உண்டு. பாலச்சந்தரை எப்போதும் தனது குருவாகவே நினைப்பவர் ரஜினி. பல புதுமுக நடிகர், நடிகைகளை உருவாக்கியவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார்.

சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களையும் இயக்கி இருக்கிறார். இப்போதுள்ள பல இயக்குனர்களுக்கும் முன்னோடி இவர். ரஜினி, கமலே இவர் முன்னால் கைகட்டிதான் நிற்பார்கள். ஆனால், அவரை ‘வா.. போ’ என ஒரு சின்ன காமெடி நடிகர் பேசி வந்தார் என்றால் நம்ப முடிகிறதா?..

இதையும் படிங்க: அமீர் எனக்கு எப்பையுமே அண்ணன் தான்.. அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. ஞானவேல்ராஜா ட்வீட்..

அது வேறு யாருமில்லை. மறைந்த நடிகர் மயில்சாமிதான். பாலச்சந்தர் எதாவது படம் இயக்குவதாக செய்தி வெளியானால் நேராக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு போவாராம்.. என்ன தலைவரே எப்படி இருக்க?.. ஏன் கத்துற?.. கத்துனா போய் சேர்ந்துடுவ.. பொறுமையா சொல்லிக்கொடு.. கால நீட்டு’ என சொல்லிவிட்டு அவரின் கை காலை பிடித்துவிடுவாராம். எனக்கென்ன கேரக்டர் இருக்கா ? எப்ப கூப்பிடுவ?... சீக்கிரம் கூப்பிடு’ என சொல்லிவிட்டு போய் கொண்டே இருப்பாராம்.

இந்த தகவலை ஊடகம் ஒன்றில் சொன்ன காமெடி நடிகர் பெஞ்சமின் மயில்சாமியிடம் ‘கமல் சார் ரஜினி சாரே அவர் முன்பு கை கட்டி நிற்பார்கள்.. பேச பயப்படுவார்கள். நீங்க என்ன இப்படி பேசுகிறீங்க?’ என கேட்க, அதற்கு மயில்சாமி ‘நம்ம பாலச்சந்தர் சார்தான.. அவருக்கு என்ன ரெண்டு கொம்பா இருக்கு. அவர் என்ன எதுவும் நினைக்கமாட்டார்’ என சொல்வாராம்.

இப்படி நடிகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரிடமும் அன்பாகவும், நிறைய உரிமை எடுத்து பழுகும் மனிதராகவே மயில்சாமி இருந்துள்ளார்.

இதையும் படிங்க: போர இடமெல்லாம் கன்னிவெடி! விக்ரம் படத்திலயும் படாத பாடு பட்ட அமீர் – 10 லட்சம் கொடுத்தும் புண்ணியமில்ல

 

Related Articles

Next Story