விஜய் டிவியின் அந்த சீரியல் ஹீரோ மயில்சாமியின் மகனா? இது தெரியாம போச்சே!...
Apr 19, 2024, 16:29 IST
Mayilsamy: நடிகர் மயில்சாமியின் மகன் விஜய் தொலைக்காட்சியின் ஒரு பிரபல தொடரில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் யார்? என்ன சீரியல் தெரியுமா? தென்னிந்திய சினிமாவில் பிரபலமான மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தவர் மயில்சாமி. மேடை நிகழ்ச்சிகளிலும் திறமையாக நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். சின்ன வயதில் இருந்தே நாடகத்தில் அதீத கவனம் செலுத்துவார். இதையும் படிங்க: புரட்சித்தளபதி தளபதி ஆக வேண்டாமா? ஆசையை தூண்டி விஷாலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபலம் தமிழ் தொலைக்காட்சியில் அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர். தாவணி கனவுகள் படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தூள் படத்தில் இவரும், விவேக்கும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நடிப்பில் மட்டும் அல்லாமல் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த வருட சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட உடனே உயிரிழந்தார். இது பலருக்கும் சோகத்தினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரின் மகன் தற்போது விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறாராம். இதையும் படிங்க: அந்த படத்தில் நான் நடிக்கவா? ஆசையாக கேட்ட சரத்குமார்… முடியவே முடியாது என மறுத்த இயக்குனர்!…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் ஹீரோவாக நடிப்பவர் தான் மயில்சாமியின் மகன் யுவன். தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த சீரியலில் சத்தமே இல்லாமல் தன் நடிப்பால் ரசிகர்களை யுவன் கவர்ந்து இழுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
