அமெரிக்கா போன எஸ்.பி.பிக்கு வந்த சங்கடம்! – உள்ளே புகுந்து காப்பாற்றிய மயில்சாமி!

இந்தியா முழுவதும் பல மொழிகளில் தனது குரலை ஒலிக்க செய்தவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். அவர் சினிமாவிற்கு வந்த காலம் முதல் இறுதி காலம் வரை அவரது குரலுக்கு இருந்த வரவேற்பு குறையவே இல்லை. இளையராஜா இசையமைத்தால் அந்த பாடல்கள் ஹிட் அடிக்கும் என ஒரு நம்பிக்கை இருந்தது.
அதே நம்பிக்கை எஸ்.பி.பியின் குரல் மீதும் தமிழ் சினிமாவிற்கு இருந்தது. சினிமாவில் மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளுக்கும் சென்று எஸ்.பி.பி பாடுவதுண்டு. இப்படி ஒரு முறை அமெரிக்காவில் ஒரு பாடல் நிகழ்ச்சி ஏற்படாகி இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு கிளம்பிய எஸ்.பி.பி நடிகர் மயில்சாமியையும் கூட வரச்சொல்லி கேட்டுக்கொண்டார்.
அப்போது மயில்சாமியும் எஸ்.பி.பியும் நல்ல பழக்கத்தில் இருந்தனர். மயில்சாமிக்கும் அமெரிக்காவிற்கு செல்ல ஆசையாக இருந்ததால் அவரும் அமெரிக்காவிற்கு சென்றார். அமெரிக்காவில் பாடல் நிகழ்ச்சி ஆரம்பித்து நன்றாக சென்று கொண்டிருந்தது. பொதுவாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் என்ன பாடல்கள் பாட போகிறோம் என்பதை ஏற்கனவே திட்டமிட்டு விடுவார்கள்.
அப்போதுதான் அங்கு இசையமைக்கும் குழு அந்த பாடல்களுக்கான இசையை பயிற்சி செய்துவிட்டு வர முடியும். ஆனால் அங்கு திடீரென எஸ்.பி.பியை ஹிந்தி பாட்டு பாடும்படி கூறினர். ஆனால் எஸ்.பி.பியும் இசையமைக்கும் குழுவும் ஹிந்தி பாட்டிற்கு தயாராகி வரவில்லை.
அதற்கு தயாராவதற்கு அரை மணி நேரம் பிடிக்கும். அதுவரை எப்படி சமாளிப்பது? என யோசித்த எஸ்.பி.பி, மயில்சாமியை அழைத்தார். ஒரு அரை மணி நேரத்திற்கு எப்படியாவது சமாளித்துவிடு. அதற்குள் நான் தயாராகி விடுகிறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
மயில்சாமிக்கு ஏற்கனவே மேடைகளில் நகைச்சுவை செய்யும் வழக்கம் இருந்ததால் அந்த அரைமணி நேரத்தில் மக்கள் மத்தியில் நகைச்சுவையாக பேசி சமாளித்துவிட்டார். காமெடி நடிகர்கள் என்றாலே எந்த ஒரு சூழலிலும் நகைச்சுவை செய்யும் திறன் உள்ளவர்கள் என்பதற்கு மயில்சாமியின் இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.