More
Categories: Cinema History Cinema News latest news

ஹிந்தி நடிகருக்கு மயில்சாமி கொடுத்த பரிசு!.. அப்பவே அவரு அப்படித்தான்!…

மயில்சாமி ஒரு நகைச்சுவை நடிகர். ஆரம்பங்களில் துணை வேடங்களில் நடித்தார். சன் தொலைக்காட்சியில் அசத்தபோவது யாருக்கு வழக்கமான விருந்தினராகவும் இருந்தார். அவர் முன்னனி நகைச்சுவை நடிகர்களான விவேக் மற்றும் வடிவேலுவுடன் பல படங்களிள் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் தனது மிமிக்ரி திறமைக்காக புகழ்பெற்றவர். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றார். அவர் 1980 களில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தாவனி கனவுகள் (1984) திரைப்படத்தில் முதல் நடிகராக நடித்தார்.

mayilsamy-1

ஆரம்ப காலத்தில் அபூர்வ சகோரர்கள் (1989) மற்றும் மைக்கேல் மதன காம ராஜன் (1990) உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். இதுபோல அவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மயில்சாமி ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். அவர் எம்.ஜி.ஆர் முகம் பதித்த தங்க செயின் ஒன்றை வாங்கி அவரது நினைவாக அணிந்துள்ளார். தமிழ்நாட்டில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாக மக்கள் பலர் அவதிப்பட்டு வந்தனர். அப்போது ஹிந்தி நடிகரான விவேக் ஒப்ராய் தமிழ்நாட்டில் சுனாமியில் பாதிக்கப்பட்ட கடலோர கிராமம் ஒன்றை தத்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்தார். இதை அறிந்த மயில்சாமி அவரை நேரில் சென்று பார்த்து அவரை பாராட்டி அவர் கழுத்தில் இருந்த தங்க செயினை அவருக்கு அணிவித்துள்ளார்.
மயில்சாமி மாரடைப்பால் பிப்ரவரி மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
sakthi sarvannan

Recent Posts