Connect with us
banner

மர்மங்கள் நிறைந்த ‘ மாயோன்’ – அசத்தல் ஸ்னீக் பீக் வீடியோ….

mayoon

Cinema News

மர்மங்கள் நிறைந்த ‘ மாயோன்’ – அசத்தல் ஸ்னீக் பீக் வீடியோ….

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரது நடிப்பில் டபுள் மீனிங் ஃப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாயோன். இந்த படத்தினை என் கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார்.

படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் படத்தை தயாரித்திருப்பது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்க ராம்பிரசாத் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

mayoon

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் டீசர் மிரட்டலாக இருப்பதாக டீசரை பார்த்தவர்கள் விமர்சனம் செய்தனர். மேலும் மாயோன் படக்குழு புது முயற்சியாக பார்வையற்றவர்களுக்காக பின்னணி குரலுடன் பிரத்தியேக டீஸர் ஒன்றையும் உருவாக்கியது.

mayoon

இந்த டீசரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மாயோன் படக்குழுவினருக்கு பெரும் பாராட்டும் கிடைத்தது. மேலும் படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்காக உயர்த்தியது. இந்த திரைப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் சில நிமிட காட்சிகள் ஸ்னீக் பீக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top