கமல் ஹாசனின் உடல் நிலை குறித்து மக்கள் நீதி மையம் கட்சி அதிகாரபூர்வ டுவீட்

by ராம் சுதன் |
kamalhassan
X

கடந்த வாரம் அமெரிக்கா சென்று இந்தியா திரும்பிய கமல் அவர்களுக்கு கொரனா தொற்று அறிகுறி இருந்ததால், தனக்கு நோய்த்தொற்று இருக்கும் என்று நினைத்து கொரனா பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு கொரனா தொற்று இருந்தது உறுதி ஆகி விட்டது.அதனால், அவர் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டார். அவ்வப்போது தனக்கு கொரனா தொற்று இருப்பதை தன் டிவிட்டர் பக்கத்தில் " அமெரிக்கா பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதி ஆனது.மருத்துவ மனையில் தனிமை படுத்திகொண்டுள்ளேன். இன்னமும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என் அவர் குறிப்பிட்டுள்ளார்.

shruti hassan

அவர், தற்போது சென்னை போரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அந்த நிலையில், அவர் உடல் நிலை குறித்து அவரின் மகள் சுருதிஹாசன் டிவிட்டரில் டிவிட் செய்தார்.அதில், " எனது தந்தையின் ஆரோக்கியத்திற்காக உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளும் நன்றி கூப்பிய கைகள் அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள காத்திருக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வலைதளங்களில் கமல் ஹாசன் குணமாகி வீடு திரும்புவது போல் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சி, டிவிட்டரில் "அந்த புகைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் கால் அறுவை சிகிச்சை செய்த போது எடுத்த புகைப்படம். அவர் இன்னும் மருத்துவமனையில் இருந்து இன்னும் வீடு திரும்பவில்லை.இருந்தும் அவர் உடல் நிலை நன்றாக உள்ளது". யாரும் அந்த புகைப்படத்தை பற்றிய சர்ச்சைகளை நம்ப வேண்டாம். அவர், நல்ல உடல்நிலை உடன் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

Next Story