ரஜினி அங்கிள் மட்டும் அல்ல.. இத்தனை ஹீரோக்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாரா மீனா?
Actress Meena: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற அனைத்து மொழி சினிமாக்களிலும் குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களில் நடித்தவர்.
ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பாகவே 20 படங்களுக்கும் மேலாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அவர் குழந்தை நட்சத்திரம் என்று சொன்னதுமே முதலில் நினைவுக்கு வருவது ரஜினியுடன் இணைந்து நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படம் தான்.
ஏனெனில் அந்தப் படத்தில் 'ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க' என்று அவர் கேட்டுக் கொண்டே ஓடிவரும் காட்சி இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன. ரஜினி தூக்கி வளர்த்த குழந்தை கடைசியில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் போது மிகப் பெரிய ஆச்சரியம்.
ஆனால் ரஜினியை தவிர்த்து சத்யராஜ், கமல், பிரபு, மம்முட்டி ,பாலையா போன்ற நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதன் பின்னர் அவர்களுக்கே ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.ஆனால் இவையெல்லாம் பெரிதாக பேசப்படவில்லை.
ரஜினி மீனா அந்த ஒரு ஜோடியை பற்றி தான் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. கமலுடன் ஒரு ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் மீனா. இந்த படத்தில் கமல் மடியில் மீனா அமர்ந்து பேசும் காட்சி எல்லாம் சமூக வலைதளத்தில் வைரலானது. அதேபோல் சத்யராஜுடன் இணைந்து ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
பின்னர் அதே சத்யராஜ் உடன் ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். பிரபு நடித்த திருப்பம், சுமங்கலி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்திருக்கிறார். பாலையாவுடன் மம்முட்டியுடன் என 80களில் முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.