தெறி பேபி இவ்வளவு பெருசாக வளர்ந்துவிட்டாரா?..ஷாக்கிங் புகைப்படம்...
90களில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீனா. மீன் போன்ற கண்கள், குழந்தை போல் கொஞ்சி கொஞ்சி பேசும் குரல், வாளிப்பான உடல் என ரசிகர்களை கட்டிப்போட்டார். முத்து, வீரா, எஜமான் ஆகிய படங்களில் ரஜினியுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
அதன்பின் கமல், அஜித், சரத்குமார், பிரபு, கார்த்திக் என அப்போதை முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் நடித்திருந்தார். மேலும், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சினிமாவில் வாய்ப்பு குறைய துவங்கியதும் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகளும் பிறந்தாள். அவர் பெயர் நைனிகா. நைனிகா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் அவரின் மகளாக நடித்தார். பார்ப்பதற்கு குட்டி மீனாவைப் போலவே இருப்பார். இப்படம் 2016ம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் அம்மா மீனாவுன் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் நைனிகா இவ்வளவு வளர்ந்துவிட்டாரா என ஷாக் ஆகியுள்ளனர்.ஏனெனில், அம்மா மீனாவின் தோள் உயரத்திற்கு அவர் வளர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.