எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடந்துவிட கூடாது… கணவர் இறந்ததால் மீனா செய்தி நெகிழ்ச்சி செயல்…

Published on: August 15, 2022
---Advertisement---

கடந்த ஜூன் மாதம் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை குறைவு காரணமாக உயிர் இழந்தார். இந்த நிகழ்வு தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

meena_main_cine

காரணம், வித்தியாசகருக்கு வயது குறைவுதான். வித்யாசாகர் – மீனா தம்பதியின் குழந்தை நைனிகாவுக்கும் குறைந்த வயது தான். அந்த சமயம் வித்யாசாகரின் மறைவு அவரது குடும்பத்தை வெகுவாக பாதித்தது என்றே கூறலாம்.

 

இந்நிலையில் அண்மையில் நடிகை மீனா ஒரு நெகிழ்ச்சிகரமான செயலை செய்துள்ளார். அதாவது தனது உடல் உறுப்புகளை இறந்த பின்பு தானமாக அளிப்பதற்கு ஒப்புதல் அளித்து வந்துள்ளார். இதனை குறிப்பிட்டு அவர் கூறுகையில்,

இதையும் படியுங்களேன் – சிவாஜியை தேசிய விருது வாங்க விடாமல் தடுத்த கமல்ஹாசன்.! பின்னணியில் இருந்த தரமான சம்பவம்.!

‘எனது கணவர் இறந்த சமயம்  யாரேனும் இவ்வாறு உடல் தானம் செய்து இருந்தால், எனது வாழ்வு மாறி இருக்கும். அதனால் எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்பதால் நான் என் உடலுறுப்புகளை தானம் செய்துள்ளேன். என மிகவும் நெகிழ்ச்சிகரமாக தனது கருத்தை கூறியுள்ளார் நடிகை மீனா.

உண்மையில் மீனாவுக்கு நடந்தது சோகமான நிகழ்வு என்றாலும், அனைவரும் பாராட்டும் வகையில் மீனா முன்னுதாரணமாக ஒரு செயலை செய்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.