ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு மீனா செய்த துணிகர காரியம்… டெடிகேஷன்னா இதுதான் போல!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மீனா. சினிமா உலகில் மிகவும் கியூட்டான நடிகையாக வலம் வந்த மீனாவுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் உண்டு. இவரின் ஒவ்வொரு முக பாவனையும் மிகவும் நேர்த்தியாக மனதை கவரும் வண்ணம் இருக்கும்.
90ஸ் கிட்ஸ்களின் மிக விருப்பமான நடிகையாக இருக்கும் மீனா, சமீப காலமாக தமிழில் அவ்வளவாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் “அண்ணாத்த” திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான “ப்ரோ டாடி” திரைப்படத்திலும் “சன் ஆஃப் இந்தியா” என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது தமிழில் “ரவுடி பேபி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு மீனாவின் கணவரான வித்யாசாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது.
கல்யாணத்தை வைத்துக்கொண்டு செய்த துணிகர காரியம்
இதனை தொடர்ந்து மீனா சினிமாவில் நடிக்க வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக “மீனா 40” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரைத்துறையை சேர்ந்த பல நடிகர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் அந்த விழாவில் பேசிய இயக்குனர் சேரன், மீனாவை குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். சேரன் இயக்கிய “பொக்கிஷம்” திரைப்படத்தின் கதாநாயகியான பத்மபிரியாவுக்கு பின்னணி குரல் கொடுக்க சரியாக தமிழ் உச்சரிப்பு தெரிந்த கவிதை நடையில் பேச கூடிய பல டப்பிங் கலைஞர்களை சேரன் தேடிக்கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் திடீரென மீனாவின் ஞாபகம் வந்ததாம்.
மீனாவை பேச வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து மீனாவுக்கு தொடர்பு கொண்டாராம். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் மீனா இரண்டு நாட்களில் திருமணம் செய்துகொள்வதாக இருந்தாராம். இந்த நேரத்தில் எப்படி கேட்பது என்று முதலில் தயக்கம் இருந்ததாம்.
தயங்கி தயங்கி பேசிய சேரன்
எனினும் சேரன் மீனாவுக்கு தொடர்புகொண்டபோது அவரது தாயார் அந்த அழைப்பை எடுத்தாராம். தாயாரிடம் விஷயத்தை கூற, அவர் மீனாவிடம் ஃபோனை கொடுத்திருக்கிறார்.
“மேடம் தப்பா நினைச்சிக்காதீங்க, டப்பிங் பேசனும் உங்க குரல் வேணும்” என தயங்கி தயங்கி கேட்டாராம். மீனா, “யாருக்கு பேசணும்” என்று கேட்க, “பத்மபிரியா” என்று கூறியிருக்கிறார். உடனே “சரி நான் பேசுகிறேன்” என்று கூறிவிட்டு அடுத்த நாள் முழு படத்திற்கான டப்பிங்கையும் முடித்துக்கொடுத்துவிட்டு சென்றாராம். இவ்வாறு அடுத்த நாள் திருமணத்தை வைத்துக்கொண்டு முந்தைய நாள் தான் நடிக்காத வேறொரு படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார் மீனா.
இதையும் படிங்க: வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் இனிமேல் வாய்ப்பில்ல ராஜாதான்!.. இதுதான் காரணமாம்…