ரஜினிக்கு முன்னாடியே அங்க நான் பிரபலம்....! மக்கள் கூட்டத்தில் தத்தளித்த பிரபல நடிகை...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயினாக முத்திரை பதித்தவர் நடிகை மீனா. இவர் முதன் முதலின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் நெஞ்சங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டு அவர் கூடவே நடித்திருந்தார்.
பின் ஒவ்வொரு படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை நிரூபித்தார். எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினி, அம்பிகா, ராதாவுடன் சேர்ந்து நடித்திருந்தார். ஆனால் மக்கள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்திய படம் இவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த அன்புள்ள ரஜினி என்ற படம் தான். அந்த படத்தில் ஊனமுற்ற குழந்தையாக கோபக்கார குழந்தையாக அழகாக நடித்திருப்பார்.
பின் வளர்ந்து ஒரு நடிகையாக எல்லா மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இவர் ரஜினியுடன் முதன் முதலாம் ஜோடி சேருவதற்கு முன்பே ஆந்திராவில் நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளாராம். அதன் படி முதலில் ரஜினியுடன் சேரும் வாய்ப்பு கிடைக்க சூட்டிங் ஆந்திராவில் உள்ள ராஜமந்திரி என்ற இடத்தில் நடந்ததாம். ஏற்கெனவே ஹிட் படங்களை கொடுத்த மீனாவிற்கு அங்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை வரவேற்க காத்துக் கொண்டிருந்தார்களாம்.
பக்கத்தில் ரஜினி நிற்க மீனாவிற்கு ரசிகர்களை பார்த்து கை அசைக்க ஏதோ மாதிரி இருந்ததாம். ஆனாலும் ரசிகர்கள் மீனா மீனா என்று கத்தி கூச்சலிட்டனராம். ஒரு வழியாக சூட்டிங்கெல்லாம் முடித்து ரஜினி, மீனா மற்றும் படக்குழுவினர் ரயிலில் ஊருக்கு திரும்பும் வழியில் ஸ்டேஷனில் மீனாவை பார்க்க அலைமோதும் கூட்டத்தில் மக்கள் காத்துக் கொண்டிருந்தார்களாம். எப்படியோ தப்பித்து ரயிலில் ஏறி கம்பார்ட்மென்டில் உட்கார்ந்து விட்டார்களாம். அப்பொது கதவை ஒருத்தர் தட்ட திறந்ததும் ரஜினி நின்று கொண்டிருந்தாராம். உடனே ரஜினி மீனாவிடம் நீங்கள் இங்கு அவ்ளோ பிரபலமா? என்னால நம்பவே முடியவில்லை. பரவாயில்லை, வாழ்த்துக்கள் மீனா என்று ரஜினி கூறினார். உடனே மீனா நன்றி அப்படினு மட்டும் சொன்னாராம். இதை மீனா ஒரு பேட்டியில் கூறும் போது தெரிவித்தார்.