நடிகர் சொன்ன ஒரு வார்த்தை!.. தவறாமல் கடைபிடிக்கும் மீனா.. யாரு என்ன சொல்லியிருப்பா?..
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னனி நடிகையாக வலம் வந்தார். தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே தெலுங்கு உலகில் நன்கு அறிமுக நடிகையாக வலம் வந்தார்.
ஒரு சமயம் ஆந்திராவில் ரஜினியுடன் ஒரு படத்தின் படப்பிடிப்பில் மீனா இருக்க இவர்கள் வந்திருப்பதை பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டனர். முதலில் ரஜினி வந்து கையசைத்து நிற்க அதன் பின் மீனா வந்தாராம். அவரை பார்த்ததும் கூட்டத்தினர் ஆரவாரம் செய்து கத்தியிருக்கின்றனர். அப்போது மீனாவிற்கு வெறும் 17 வயது தானாம். உடனே ரஜினி மீனாவை பார்த்து உங்களுக்கு இவ்ளோ ரசிகர்களா? என்று ஆச்சரியப்பட்டு போனாராம்.
இந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை கூட்டியிருந்தவர் நடிகை மீனா. தமிழில் தொடர்ந்து கார்த்திக், ரஜினி ஆகியோருடன் இணைந்து நல்ல படங்களை கொடுத்தவர். சொல்லப்போனால் அனைத்து நடிகர்களுடன் பொருந்தத்தக்க நடிகையாகவே மீனா வலம் வந்தார். மேலும் வெரைட்டியாக தனது பெர்ஃபார்மன்ஸை கொடுப்பதில் சிறந்தவர்.
இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்ததிலிருந்து இப்ப வரைக்கும் மீனா கடைபிடிக்கின்ற விஷயமாக இருப்பது படப்பிடிப்பிற்கு உரிய நேரத்தில் வருவது. அந்தப் பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே பிரபல தெலுங்கு நடிகரான நாகேஷ்வர ராவ். இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கும் போது நாகேஷ்வர ராவ் மீனாவிடம் ‘ நீ யாருக்காகவும் காத்திருக்கலாம், ஆனால் உனக்காக யாரும் காத்திருக்க கூடாது, அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்’ என்று ஒரு சமயம் சொன்னாராம்.
அதை பசுமரத்தாணி போல மனதில் பதிய வைத்து இன்று வரை அதை அப்படியே கடைபிடித்து வருகிறாராம். எந்த தயாரிப்பாளர்களிடம் கேட்டாலும் மீனாவை பற்றி இதுவரை யாரும் எதுவும் தவறாக சொன்னதில்லையாம். அதே போல் எந்த தயாரிப்பாளருக்கும் மீனாவால் எந்த நஷ்டமும் வந்ததில்லையாம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.