செஞ்சி வச்சி சிலை மாதிரி உடம்பு!.. ரசிகர்களை சொக்க வைக்கும் தளபதி 68 பட நடிகை...
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மீனாக்ஷி சவுத்ரி மாடலிங் துறையில்தான் முதலில் நுழைந்தார். பல அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். சில அழகி போட்டிகளில் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.
அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே அதில் முயற்சி செய்தார். ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். இதுவரை 6 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார்.
தமிழில் விஜய் ஆண்டணி நடித்து வெளியான கொலை படத்தில் மாடல் அழகியாகவே நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில்தான், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. எனவே, சந்தோஷமாக இந்த படத்தில் மீனாக்ஷி நடித்து வருகிறார்.
அதோடு, கட்டழகை விதவிதமாக காண்பித்து தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பட்டுப்புடவையில் கட்டழகை காட்டி மீனாக்ஷி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கிறது.