Categories: Entertainment News

இனிமே ஃபுல் கவர்ச்சிதான்!… தர லோக்கலா இறங்கிய மீரா ஜாஸ்மின்…

கேரளாவை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

 

திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா