எட்டி பார்க்குறது யாருனு தெரியலயே..! நைசா காட்டிய ரன் பட நாயகி..
90'ச் கிட்ஸ்களின் ஃபேபரைட் நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். மலையாள மொழி படங்களில் அதிக கவனம் செலுத்திய இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன் படம் தான் இவரின் தமிழ் முதல் படம்.
அந்த படத்தில் இவரின் பவ்யமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் தன்பால் ஈர்த்தார். தொடர்ந்து புதிய கீதை, ஆஞ்சநேயா, மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து, பரட்டை என்ற அழகுசுந்தரம், சண்டைக்கோழி என பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய், அஜித், தனுஷ்,மாதவன், விஷால், பிரசாந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் நடித்துள்ளார். நீண்ட நாள்களாய் திரையுலகிற்கு அடி வைக்காத மீரா கைவசம் சில படங்கள் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இதனிடையில் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட தொடங்கியுள்ளார். இந்த நிலையில் எப்பொழுதும் குடும்ப குத்துவிளக்காய் காட்சி தரும் அம்மணி செம தூக்கலான உடையணிந்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.