அந்த பொண்ணுக்கு இதுதான் உசுரு… சத்தமே வராது.. விஜய் ஆண்டனி மகள் மீராவின் மறுப்பக்கம்… ஷாக்கான தகவல்கள்
Meera Vijay Antony: பள்ளி படிப்பை முடிக்காத விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆதரவை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பிலும் சமீபகாலங்களில் பிஸியாக இருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் பெரிய வரவேற்பினை பெறவில்லை. சமீபத்தில் அவருக்கு பெரிய விபத்து நடந்தது.
இதையும் படிங்க: இவரு அட்லிக்கே அண்ணனா இருப்பாரு போல!.. லியோ பட போஸ்டர்களை எங்கே இருந்து சுட்டு இருக்காங்க பாருங்க!..
இப்படி பல பிரச்னைகளில் இருந்து கஷ்டப்பட்டு மீண்டு வந்தவர் விஜய் ஆண்டனி. ஆனால் நேற்று அதிகாலை அவரின் மூத்த மகள் மீரா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் வீட்டில் வேலை செய்த பெண்மணி ஒருவர் மீரா குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மீரா தனக்கு தேவையானதை அவரே எடுத்துக்கொள்வார். யாரையுமே கேட்க மாட்டார். டீ, காபிக்கு மட்டும் தான் வேணும் எனக் கேட்பார்.
இதையும் படிங்க: போற இடத்துல எல்லாம் பொய்!.. போதும் ரீலு அந்து போச்சி!.. எப்பதான் திருந்துவாறு விஷால்?!..
அமைதியான பெண். அவர் வீட்டில் இருப்பதே தெரியாது. தயிர் என்றால் மீராவுக்கு ரொம்பவே பிடிக்கும். தன்மையாக பேசி பழக்கம் கொண்டவர். அவர் பிறந்தநாளில் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார். அப்படிப்பட்ட பெண் இப்போது இல்லை என நினைக்கும் போது அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
நேற்று இரவு சமயத்தில் மீராவின் வீட்டில் இருந்து அவர் பெற்றோருக்கு எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அப்பா, அம்மா மிஸ்யூ என எழுதி இருந்தார். ஆனால் தன்னுடைய தற்கொலைக்கான காரணத்தினை எதுவும் லெட்டரில் குறிப்பிடவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.