கேப்டனுக்கு அப்புறம் அவர்தான்!.. இப்ப இறங்கினாலும் சி.எம்!.. அடடே மீசை ராஜேந்திரனே சொல்லிட்டாரே!..
Vijayakanth: தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் விஜயகாந்த். மதுரையிலிருந்து சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்து வாய்ப்பு தேடினார். பல அவமானங்களையும் சந்தித்தார். படப்பிடிப்பு தளத்தில் பல பாகுபாடுகளை பார்த்தார். சின்ன வேடத்தில் விஜயகாந்த் நடிக்கும்போது சாப்பிட கூட நேரம் கொடுக்காமல் அவரை அழைத்த அனுபவத்தையெல்லாம் சந்தித்தார்.
‘இந்த முகமெல்லாம் சினிமாவில் நடிக்க ஆசைப்படலாமா?’ என்கிற பலரும் அவரை அசிங்கப்படுத்தினார்கள். வாய்ப்பு கேட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி சின்ன சின்ன வாய்ப்புகளை பெற்றார். சில படங்களில் வில்லனாக நடிக்க கூட வாய்ப்பு வந்தது. ஒரு ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் அதை தடுத்துவிட்டார். ஏனெனில், விஜயகாந்த் ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
இதையும் படிங்க: நாள் முழுக்க மரத்து மேல உட்காந்திருந்த விஜயகாந்த்!. சண்டைன்னு வந்துட்டா அண்ணன் கில்லிதான்!..
வாய்ப்பு தேடியபோது என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தோமோ அதை நாம் யாருக்கும் செய்யக்கூடாது என்பதில் விஜயகாந்த் உறுதியாக இருந்தார். அவர் வளர்ந்து பெரிய நடிகரானதும் படப்பிடிப்பில் எல்லோருக்கும் சரிசமமான சாப்பாடை போட்டார். மேலும், விஜயகாந்தின் அலுவலகத்தில் எப்போதும் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். சினிமாத்துறையில் வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடிய பலரும் அங்குதான் சாப்பிட்டனர்.
அதனால்தான் விஜயகாந்தை எல்லோரும் எப்போதும் புகழ்ந்து பேசுவார்கள். அவரை யாருமே திட்டமாட்டார்கள். அதற்கு காரணம் அவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் உதவி செய்யும் குணம்தான். விஜயகாந்துக்கு நெருக்கமானவரும், பல படங்களில் நடித்தவருமான மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது:
கேப்டனுக்கு அடுத்து அஜித் மிகவும் நல்லவராக இருக்கிறார். வெளியே தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார். ஓட்டு போனால் கூட மக்களோடு மக்களாக வரிசையில் நிற்கிறார். மிகவும் எளிமையாக இருக்கிறார். எல்லா இடத்திலும் கண்ணியமாக நடந்து கொள்கிறார். மக்களோட ஆதரவு அவருக்கு இருக்கு. இப்ப அரசியலுக்கு வந்தாலும் அவர்தான் சிம்’ என அவர் பேசினார்.
இதையும் படிங்க: வடிவேலு அட்வான்ஸ் என் சம்பளமா?!.. விஜயகாந்த் படத்தில் தகராறு செய்த செந்தில்…