இப்படி தலைப்பு வச்சா படம் ஓடாது!.. விஜய்க்கு இப்படி ஒரு ராசி இருக்கு!.. பொங்கும் பிரபலம்...

பொதுவாக பல மனிதர்களுக்கும் சில விஷயங்களில் செண்டிமெண்ட் உண்டு. சினிமாவில் அது மிகவும். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என சினிமா துறை சம்பந்தப்பட்ட பலருக்கும் எக்கச்சக்க செண்டிமெண்ட் இருக்கும். அதை பின்பற்றவில்லை என்றால் தோற்றுவிடுவோம் என பயப்படுவார்கள்.

தோல்வி பயத்தில் பல அபத்தமான செண்டிமெண்ட்டுகளை கூட பின்பற்றுவார்கள். வெள்ளிக்கிழமை மட்டுமே படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற செண்டிமெண்ட் பல வருடங்களாக சினிமாவில் இருந்தது. அஜித்துக்கு செண்டிமெண்ட் வியாழக்கிழமை. அதனால் அவரின் படங்கள் வியாழக்கிழமை வெளியானதும். இப்போது சில படங்கள் வியாழக்கிழமை வெளியாகிறது.

இதையும் படிங்க: மீண்டும் ‘பில்லா’ ரேஞ்சுக்கு இறங்கிய நயன்தாரா! விக்கியின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? இததான் எதிர்பார்த்தோம்

படத்தில் நடிக்கும்போது கதாநாயகியின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் அந்த படம் ஹிட் அடிக்கும் என்று கூட சினிமாவில் செண்டிமெண்ட் உண்டு. பாஸிட்டிவான செண்டிமெண்ட் போலவே, நெகட்டிவான செண்டிமெண்ட்டுகளும் சினிமாவில் உண்டு. ஒரு படத்தின் படப்பிடிப்பில் முதல் காட்சியே சோகமாக எடுக்கக் கூடாது, ஒருவர் இறந்துவிடுவது போல காட்சி எடுக்கக் கூடாது என நிறைய உண்டு. ஆனால், சில இயக்குனர்கள் அதை உடைத்தார்கள்.

புலி

இந்நிலையில், விஜயகாந்தின் ஆதரவாளரும் விஜயை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருபவருமான நடிகர் மீசை ராஜேந்திரன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ விஜயின் படங்களுக்கு விலங்குகளின் பெயரில் தலைப்பு வைத்தால் படம் ஓடாது. புலி, பைரவா, பீஸ்ட், லியோ என எந்த படங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

இதையும் படிங்க: கோட் இரண்டாவது சிங்கிள் எப்போ தெரியுமா? விசில் போடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

பெரிய ஹிட் படங்கள் கொடுத்த தயாரிப்பு நிறுவனங்களும் விஜயை வைத்து படம் எடுத்தால் தோல்வியை சந்திக்கும். ஆஸ்கர் ரவிச்சந்திரன் வேலாயுதம் எடுத்தார். புகழ்பெற்ற ஏவிஎம் நிறுவனம் வேட்டைக்காரன் படம் எடுத்தார்கள், பழம் பெரும் சினிமா நிறுவனம் விஜயா புரடெக்‌ஷன்ஸ் விஜயை வைத்து பைரவா எடுத்தார்கள்.

ஆடு, பாம்பு, குரங்கை கூட வைத்து ஹிட் கொடுத்த இராமநாராயணன் நிறுவனம் விஜயை வைத்து எடுத்த படம் மெர்சல். அப்படத்திற்கு பின் அந்த நிறுவனம் இதுவரை படமே எடுக்கவில்லை. ஏஜிஎஸ் நிறுவனம் எடுத்த படம்தான் பிகில். அந்த படம் பெரிய நஷ்டம். இதுதான் விஜயின் ராசி’ என அவர் கோபத்துடன் பொங்கினார்.

 

Related Articles

Next Story