இத மட்டும் காட்ட சொல்லுங்க!.. நான் மீசையை எடுக்குறேன்.. மீண்டும் சவாலுக்கு ரெடியான மீசை ராஜேந்திரன்…

Meesai Rajendren: சமீபத்தில் சமூகவலைதளத்தில் மிகவும் டிரெண்ங்காக இருந்தவர் வில்லன் கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்த மீசை ராஜேந்திரன். லியோ திரைப்படம் ஜெயிலர் வசூலை மிஞ்சாது எனும் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் விஜய் ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றவர்.

இவரின் பேச்சுக்கு விஜய் ரசிகர்களிடமிருந்து பலவித கண்டனங்கள் வந்தவண்ணம் இருந்தன. மேலும் லியோ வசூல் ஜெயிலரின் வசூலை தாண்டாது எனவும் அவ்வாறு தாண்டினான் நான் தனது மீசையை எடுத்து கொள்கிறேன் எனவும் சவால் விட்டிருந்தார்.

இதையும் வாசிங்க:யோகிபாபுவை புறக்கணித்த சிவகார்த்திகேயன்.. பின்ன யாரா இருந்தா என்ன?!.. அடிச்ச அடி அப்படி!

மேலும் லியோ திரைப்படம் அந்த அளவு வசூலை பெறாது என மிகவும் அழுத்தமாக இன்னமும் பதிவு செய்து வருகிறார். மேலும் ஜெயிலர் திரைப்படம் 5 வாரங்களுக்கு பல தியேட்டர்களில் ஓடியது எனவும் ஆனால் லியோ திரைப்படத்திற்கு பல தியேட்டர்களில் தினசரி காட்சிகள் கணிசமாக குறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் விஜய் சிறந்த நடிகர்தான் எனவும் லோகேஷ்க்கு என தனித்தன்மை இருப்பதாகவும் அதனை இப்படத்தில் அவர் காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அவரது அடுத்த படமான தலைவர் 171ல் அதனை அவர் கண்டிப்பாக காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் வாசிங்க:ஒன்னு ஒன்னா கிழிக்க வேண்டாம்! மொத்தமா கிழிச்சா போதும் – லியோ பட தயாரிப்பாளருக்கு வாய் பூட்டு போட்ட தளபதி

பல ஊடகங்கள் லியோ திரைப்படம் லியோனார்டு டி கேப்ரியோ நடித்த Killer of The Flower Moon திரைப்படத்தின் முதல் நாள் வசூலை தாண்டிவிட்டது எனவும் கூறிவந்தனர். இதனை மீசை ராஜேந்திரன் மறுத்து பேசியுள்ளார். ஊடகங்கள் சரியான ரிசல்டை விட வேண்டும் எனவும் நான் ஒரு பார்வையாளராகதான் எனது கருத்தினை தெரிவித்தேன் எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு பேசிய மீசை ராஜேந்திரன் லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். அதன்படி வருகின்ற மார்ச் மாதம் வருமான வரித்துறையில் லியோ பற்றிய வரவு, செலவு மற்றும் வசூல் இவற்றை எனக்கு காட்ட சொல்லுங்கள். அவ்வாறு காட்டுகையில் அப்படம் ஜெயிலர் வசூலை முறியடித்திருந்தால் நான் கண்டிப்பாக ஒரு லட்சம் ரூபாய் ரேசரை வைத்து எனது மீசையை எடுத்து கொள்கிறேன் என மீண்டும் சவால் விடுத்துள்ளார். இது ரசிகர்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பியுள்ளது.

இதையும் வாசிங்க:‘ஜெயிலர்’ வெற்றியால் துள்ளும் ரஜினி! கண்ட்ரோல் முழுக்க அவர்தான் – ரஜினி170ல் மாட்டிக்கிட்டு முழிக்கும் ஞானவேல்

 

Related Articles

Next Story