ஏன்டா இப்படி பண்ணிட்டீங்க.. மனசு உடைந்து திடீரென கதறி அழுத மீசை ராஜேந்திரன்!.. ஏன் தெரியுமா?..

Published on: December 17, 2023
---Advertisement---

லியோ படத்தின் ரிலீசின் போது நடிகர் விஜய்க்கு எதிராகவும் ரஜினிக்கு ஆதரவாகவும் பல கருத்துக்களை யூடியூப் சேனல்களில் அமர்ந்து கொண்டு பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார் மீசை ராஜேந்திரன்.

லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்து விட்டால் தனது மீசையை எடுத்து விடுவதாகவும் சொன்னார். ஆனால், ஜெயிலர் படத்தின் வசூலை விஜய்யின் லியோ முறியடித்த தாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையிலும் அது எல்லாம் பொய்யான வசூல் என்றும் தனது மீசையை எடுக்க முடியாது என பல்டி அடித்திருந்தார்.

இதையும் படிங்க: என்ன பிரபுதேவா நடிக்க வேண்டியதா? பல சித்து வேலைகள் நடந்து விஜய் படமாக மாறிய சம்பவம் – அட இந்தப் படமா?

இந்நிலையில் தற்போது, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திடீரென கதறி கதறி அழுக ஆரம்பித்து விட்டார். அதற்கு காரணம், சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தை அப்படி பார்த்ததுதான் எனக் கூறினார். விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்த பல படங்களில் கூடவே இணைந்து நடித்திருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

நல்லா இருந்த மனுஷனை ஏன்டா இப்படி பண்ணிட்டீங்க என கதறி கதறி அழுத எந்திரன் மீசை ராஜேந்திரன் யார் எப்போது போனாலும் சரி சமமாக சாப்பாடு போடுவதை கொள்கையாகவே வைத்திருந்தவர் கேப்டன் என்றும் அவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பதை பார்க்கவே முடியவில்லை எனக்கூறி மீண்டும் மனம் கேட்காமல் கதறி அழுத காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: முதல் நாள் படப்பிடிப்பு.. தடுமாறிய சிவாஜி ராவ்!.. அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்!…

சிங்கமாக வாழ்ந்து வந்த விஜயகாந்த் இப்படி வீல் சேரில் கஷ்டப்படுவதை பார்த்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாடி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.